நீதிமன்ற அறைக்குள் அரிவாளுடன் புகுந்த நபர் - நெல்லையில் பரபரப்பு

தங்கையின் வாழ்க்கையை சீரழித்த நபரை கொலை செய்ய நீதிமன்றத்தில் அரிவாளுடன் நுழைந்ததால் நபரால் பெரும் பரபரப்பு நிலவியது. 

Written by - Gowtham Natarajan | Last Updated : Jul 19, 2022, 05:44 PM IST
  • ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தங்கை
  • காதலிப்பதாக கூறி ஏமாற்றிய போலி மதபோதகர்
  • தங்கையின் தற்கொலைக்கு பழிவாங்க துடிக்கும் அண்ணன்
நீதிமன்ற அறைக்குள் அரிவாளுடன் புகுந்த நபர் - நெல்லையில் பரபரப்பு title=

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நாள்தோறும் பெண்கள் தொடர்பான பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இன்று கோவில்பட்டியைச் சேர்ந்த ஜோஸ்வா என்பவரை வழக்கு ஒன்றில் ஆஜர்படுத்துவதற்காக காவலர்கள் அவரை மகிளா நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். நீதிமன்ற அறைக்குள் நீதிபதி முன் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் கையில் அரிவாளுடன் ஜோஸ்வாவை நோக்கி வெட்டப் பாய்ந்துள்ளார். மற்றொரு வழக்கில் கைதியை அழைத்து வந்த காவலர் வேணுகோபால் துரிதமாக செயல்பட்டு அரிவாளுடன் வந்த நபரை துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தி உள்ளார்.நீதிபதி முன்பு நடைபெற்ற இச்சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

நீதிமன்ற அறைக்குள் அரிவாளுடன் புகுந்த நபர்,அரிவாளுடன் புகுந்த நபர்,பாளையங்கோட்டை,நெல்லை,மாவட்ட மகிளா நீதிமன்றம்,ஜோஸ்வா,காவலர் வேணுகோபால்,துப்பாக்கி முனையில்

பின்னர் அரிவாளுடன் வந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்த போது அந்த நபர் நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே பாப்பாங்குளம் பகுதியைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன் என்பது தெரியவந்தது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.  போலி மதபோதகரான ஜோஸ்வா ஊர் ஊராக சென்று மத பிரச்சாரம் என்ற பெயரில் இளம் பெண்களை ஏமாற்றி தனது காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். அதில் நவநீதகிருஷ்ணனின் தங்கை மற்றும் நெல்லை தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண் இருவரையும் ஜோஸ்வா ஒரே நேரத்தில் காதலித்ததுடன் இருவரையும் பல்வேறு இடங்களுக்கு வெளியே அழைத்துச் சென்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

நீதிமன்ற அறைக்குள் அரிவாளுடன் புகுந்த நபர்,அரிவாளுடன் புகுந்த நபர்,பாளையங்கோட்டை,நெல்லை,மாவட்ட மகிளா நீதிமன்றம்,ஜோஸ்வா,காவலர் வேணுகோபால்,துப்பாக்கி முனையில்

இதனால் மனமுடைந்த நவநீதகிருஷ்ணனின் தங்கை கடந்த 2017ம் ஆண்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நவநீதருஷ்ணன், தனது தங்கை சாவுக்கு காரணமான போலி மதப்போதகர் ஜோஸ்வா மற்றும் தாழையூத்தை சேர்ந்த பெண் இருவரையும் கொலைவெறியுடன் தேடியுள்ளார். ஜோஸ்வா தலைமறைவானதால் தாழையூத்து பெண்ணை கொலை செய்ய அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணின் தாய் மட்டுமே இருந்ததால் அவரை வெட்டி கொலை செய்துள்ளார்.

இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தபிறகும் தனது தங்கை வாழ்க்கையை சீரழித்த ஜோஸ்வாவை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்துள்ளார். இந்த நிலையில்தான் கற்பழிப்பு வழக்கு ஒன்றில் போலி மதப்போதகர் ஜோஸ்வா இன்று நெல்லை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதை அறிந்து நவநீதகிருஷ்ணன் நீதிமன்றத்திற்குள் வைத்தே ஜோஸ்வாவை வெட்டி கொலை செய்யும் எண்ணத்துடன் கையில் அரிவாளுடன் நீதிமன்ற அறைக்குள்ளேயே தைரியமாகச் சென்றுள்ளார்.

மேலும் படிக்க | மசாலா பாக்கெட் கவரை விழுங்கிய ஏழு மாத குழந்தை உயிரிழப்பு

ஆனால் காவலர் வேணுகோபால் மிகத் துரிதமாக செயல்பட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கி முனையில் நவநீதகிருஷ்ணனை சரண்டர் செய்ததால் நீதிபதி கண் முன்பு நடக்க இருந்த கொலை சம்பவம் தவிர்க்கப்பட்டது. தற்போது பாளையங்கோட்டை போலீசார் நவநீதகிருஷ்ணனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லையில் நீதிமன்ற அறைக்குள் நீதிபதி கண் முன்னே கையில் அரிவாளுடன் கொலை செய்ய வந்த நபரால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. 

மேலும் படிக்க | மாணவி உயிரிழப்பு : கடலூரில் போலீஸ்படை குவிப்பு - எதனால் ?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News