ஒபாமா-வின் அதிரடி விஸிட், மகிழ்ச்சி வெள்ளத்தில் குழந்தைகள்!
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, கிறிஸ்துமஸை முன்னிட்டு சாண்டா கிலாஸாக வேடமணிந்து குழந்தைகள் மருத்துவ முகாமிற்கு சென்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்!
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, கிறிஸ்துமஸை முன்னிட்டு சாண்டா கிலாஸாக வேடமணிந்து குழந்தைகள் மருத்துவ முகாமிற்கு சென்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்!
அமெரிக்காவின் பிரபலமான அதிபர்களின் ஒருவராக கருதப்படும் பராக் ஓபாமா, குழந்தைகளோடு எப்போதும் அன்பாக பழுகுபவர். தனது இனக்கமான பன்பிற்காக உலகளவில் புகழப்படுபவர். இந்நிலையில் எதிர்வரும் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேசிய குழந்தைகள் மருத்தவ காப்பகத்திற்கு கடந்த புதன் அன்று அவர் சாண்டா கிலாஸ் வேடமணிந்து அதிரடி விஸிட் அளித்துள்ளார்.
சாண்டா தொப்பி, பை நிறைய பரிசு பொருட்களை கொண்டு தேசிய குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்ற ஒபாமாவை பார்த்து அந்த மருத்துமனையில் இருந்த குழந்தைகள் இன்ப வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.
ஒபாமாவை உற்சாகத்துடன் வரவேற்ற அந்த மருத்துவமனை பணியாளர்களுக்கு தன் நன்றியை ஒபாமா தெரிவித்து கொண்டார்.
பராக் ஒபாமா கிறிஸ்துமஸ் தாத்தாவாக வலம் வரும் வீடியோவினை தேசிய குழந்தைகள் மருத்துவமனை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளனர்.
“இரு பெண் பிள்ளைகளுக்கு தந்தையான நான், இந்த தருணத்தில் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளும் செவிலியர், பணியாளர்கள், மருத்துவர்களின் பணிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என இச்சந்திப்பின் போது ஒபாம தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியான ஒபாமா, தற்போது வாஷிங்டன்னில் வசித்து வருகின்றார். சென்ற வருடம் இதை போல் கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடம் அணிந்து மிடில் ஸ்கூல் மாணவர்களை ஒபாமா மகிழ்வித்தது குறிப்பிடத்தக்கது.