இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் (Pakistan) லாகூர் (Lahore) மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களில் காற்றின் (Air Quality) தரம் வெள்ளிக்கிழமை (Friday) ஆபத்தான அளவைத் தாண்டியது. இதனால், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும் (School) இரண்டு நாட்கள் மூட உள்ளூர் அரசு உத்தரவிட்டு உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, "லாகூர், பைசலாபாத் மற்றும் குஜ்ரான் வாலா மாவட்டங்களின் எல்லைக்குட் பட்ட பொது மற்றும் தனியார் பள்ளிகள் நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் அடர்த்தியான புகைமூட்டத்தைக் கருத்தில் கொண்டு மூடப்படும்." என்று அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செய்தி நிறுவனமான சின்ஹுவாவின் அறிக்கையின்படி, பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூர், ஏர் விஷுவல் புள்ளி விவரங்களில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. உலக காற்று தர குறியீட்டு (World Air Quality Index) அமைப்பு, கடந்த சில வாரங்களாக நகரத்தில் காற்றின் தரம் மிகவும் மோசம அடைந்துள்ளதாக புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.


வியாழக்கிழமை லாகூரில் நகரில் செய்த மழை காரணமாக அங்கு ஒரு அடர்த்தியான மூடு பனியை (Air quality index) உருவாகியதால், மக்கள் சுவாசிக்க முடியாமலும், வெளியில் செல்ல முடியாமலும் ஆபத்தாக மாறியது. இது பொது மக்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.


லாகூர் பிரிவு ஆணையர் ஆசிப் பிலால் லோதி உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தபோது, காற்றில் ஏற்பட்டுள்ள மாசு குறித்து அரசாங்கம் பரிசீலிக்கத் தொடங்கி உள்ளதாகவும், மூடுபனி அளவு மேலும் உயர்ந்தால் செயற்கை மழையை கொண்டு வர பரிசீலனை செய்வோம் என்றும் கூறினார்.


இந்திய துணைக் கண்டத்தின் மாசுபட்ட முதல் 10 நகரங்களில் டெல்லி, லாகூர், கராச்சி, கொல்கத்தா, மும்பை மற்றும் காத்மாண்டு போன்றவை இடம் பெற்றுள்ளன. அதாவது, ஆசியாவில் காற்று மாசுபாடு தெற்காசியாவில் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


அதேபோல டெல்லியின் காற்று மாசுபாடு தலைப்புச் செய்திகளில் வலம் வந்துக் கொண்டிருக்கிறது, தேசிய தலைநகரில் உள்ள மாசு நிலைமை உலகளாவிய சுற்றுலாப் பயணிகள், முதலீட்டாளர்கள் மற்றும் இந்தியா மீதான சர்வதேச பார்வை மாற செய்துள்ளது. 


ஒருபக்கம் டெல்லி அரசு தொடர்ந்து பல முயற்ச்சிகளை எடுத்து வருகிறது. பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஆனாலும் நாளுக்கு நாள் காற்றின் மாசு மிகவும் மோசமாகி வருகிறது. இது பெரும் கவலை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் டெல்லி அரசின் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றம், ஒற்றை-இரட்டை இலக்க வாகன இயக்க திட்டத்தால் காற்று மாசுபாட்டில் இருந்து ஏதாவது நிவாரணம் கிடைத்துள்ளதா? எனக் கேட்டத்தோடி, அதுக்குறித்து தகவலையும் அளிக்கமாறு கூறினார். மேலும் டில்லியில் நிலவும் காற்று மாசுபாட்டை சரி செய்ய காற்று சுத்திகரிப்பு கோபுரங்களை அமைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு வகுக்க வேண்டும் என உத்தரவிட்டு, பல வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பித்து உள்ளது. 


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.