Omicron: கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு (CoronaVirus New Variant Omicron) தொடர்பாக இங்கிலாந்து விஞ்ஞானிகள் முக்கிய  எச்சரிக்கையை வழங்கியுள்ளனர். ஏப்ரல் இறுதிக்குள், பிரிட்டனில் Omicron காரணமாக இறப்பு எண்ணிக்கை 25,000 முதல் 75,000 வரை இருக்கலாம் என எச்சரித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டில் தடுப்பூசி போடுவதில் எவ்வளவு முன்னேற்றம் இருக்கிறது என்பதைப் பொறுத்து இறப்பு எண்ணிக்கை கூடவோ, குறையவோ இருக்கலாம் என எச்சரித்துள்ளனர். ஓமிக்ரான் (Omicron) தொற்றின் தன்மை குறித்து இன்னும் நிச்சயமற்ற நிலை இருப்பதாக பிரிட்டன் நிபுணர்கள் கூறுவதாக பிபிசி சனிக்கிழமை தெரிவித்துள்ளது. லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் (LSHTM) அமைப்பின் நோயியல் நிபுணர்களின் குழு ஒமிக்ரான் குறித்து ஆய்வு  செய்து, அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.


ALSO READ | பகீர் சம்பவம்! ஒரே நாளில் 10 டோஸ் கொரோனா தடுப்பூசி!


LSHTM ஆய்வு  அறிக்கையில், தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு, Omicron தொற்று பாதிப்பு குறைவாக இருக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையில்  ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றும், தற்போதுள்ள Plan B நடவடிக்கைகளும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) வழங்கும் பணியை தீவிரப்படுத்துவது ஓமிக்ரானின் பாதிப்பை குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமையன்று பிரிட்டனில் 54,073 புதிய தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில் 633 ஒமிக்ரான் தொற்று பாதிப்புகள் அடங்கும். இருப்பினும், Omicron தொற்று பாதிப்புகளின் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 


ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான நிக் டேவிஸ் கூறுகையில், ஓமிக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது, இது மிகவும் கவலை அளிக்கிறது. விஞ்ஞானிகளின் அறிக்கையில், தற்போது பிரிட்டனில்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.


ALSO READ | Omicron அச்சுறுத்தலால் சர்வதேச விமானங்களுக்கான தடை ஜனவரி 31 வரை நீட்டிப்பு


இந்த ஆண்டு நவம்பர் கடைசி வாரத்தில், கோவிட் ஓமிக்ரானின் புதிய மாறுபாடு கண்டறியப்பட்டது. இந்த மாறுபாடு உலகம் முழுவதும் நிச்சயமற்ற தன்மையையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. இருப்பினும், WHO இது குறித்து தெரிவிக்கையில், 47 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள Omicron மாறுபாட்டிலிருந்து இறப்பு எதுவும் இல்லை என கூறியுள்ளது. ஆனால், வேகமாக அதிகரித்து வரும் நோய்த்தொற்று காரணமாக, அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா உட்பட ஐரோப்பாவின் பல நாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.


ALSO READ  | இந்தியாவில் 23 பேருக்கு Omicron தொற்று! அதிகரிக்கும் அச்சம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR