கொரோனா தொற்றினால்,உலக நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வரும்நிலையில் காங்கோவில் உள்ள வாங்காட்டாவில் இதுவரைஆறு புதிய எபோலா தொற்று பாதிப்புகள்  கண்டறியப்பட்டுள்ளனஎன காங்கோவின் சுகாதார அமைச்சக கூறியுள்ளது. அதில்  நான்குபேர் இறந்துவிட்டனர், இரண்டு பேர் சிகிச்சையில் உள்ளனர். நோய் பரவலை கண்டறியும் நடவடிக்கைகள் அதிகரிக்கும் போது வரும் காலத்தில் மேலும் தொற்று பாதிப்புகள் கண்டறியப்படலாம் என்று அமைச்சகம் கவலை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் உலகச் சுகாதார அமைப்பின், டெட்ரோஸ் அதனம் கேப்ரியேசஸ் இது குறித்து பேசுகையில், “கோவிட்-19 மட்டும் இந்த உலகை அச்சுறுத்தும் நோய் அல்ல எபோலா உள்ளிட்டஇன்னும் சில வைரஸ் அச்சுறுத்துல்களும் உள்ளன என்பதையே இது நினைவூட்டுகிறது”என்று எச்சரித்தார். இப்போதைக்கு கொரோனா மீது முழு கவனம் இருந்தாலும், இதே போன்ற பிறதொற்று நோயையும், உலகச் சுகாதார அமைப்பு  தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது, என்றார் கேப்ரியேசஸ்.


READ | ‘எபோலா' போன்ற ஆபத்தான தொற்றுநோய் கடலில் பரவியுள்ளது; விஞ்ஞானிகள் கருத்து...


காங்கோவில் எபோலா பரவல் முதன்முதலில் 1976 ஆம் ஆண்டில், கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. காங்கோவில், 2018 மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை, 9 வது முறையாக, பாண்டக்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்,  எபோலா தொற்று பரவியது.


இப்போது இது ஒரு சவாலான நேரத்தில் பரவுகிறது, ஆனால் தொற்று பரவினால், அதை கையாளும், தேசிய செயல்திறனை வலுப்படுத்த, ஆப்பிரிக்கா  நோய்பரவல் தடுப்பு அமைப்புகளுடன் இணைந்து, WHO கடந்த இரண்டு ஆண்டுகளில் பணியாற்றியுள்ளது" என்று ஆப்பிரிக்காவின் WHO பிராந்திய இயக்குனர் டாக்டர் மாட்ஷிடிசோ மொயெட்டி கூறினார். "உள்ளூர் தலைமையை வலுப்படுத்த, WHO ஒரு குழுவை அனுப்ப திட்டமிட்டுள்ளது. அதிக போக்குவரத்து உள்ள இடங்கள் மற்றும்  அண்டைநாடுகளுக்கு இது வேகமாக பரவும் என்பதால்,  துரிதமாக செயல்பட வேண்டும் ” என்றும் அவர் மேலும் எச்சரித்தார்.


இந்தநோய் பரவலை  தடுக்க WHO குழு, பண்டாக்காவில் பல பணிகளை மேற்கொண்டுள்ளது. WHO குழு,  மாதிரிகள் சேகரிப்பு மற்றும் பரிசோதனையில் உதவி செய்வதோடு, தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் வந்தவர்களையும் கண்டறிந்து வருகிறது.


(மொழியாக்கம் : வித்யா கோபாலகிருஷ்ணன்)