வாஷிங்டன் டிசி: ஏங்கரேஜில் வெள்ளிக்கிழமை நடு வானில் ஏற்பட்ட விமான விபத்தில் (Midair Collision), ஏழு பெர் கொல்லப்பட்டனர். இதில் ஒரு விமானத்தின் பைலட்டாக இருந்த ஒரு மாநில சட்டமன்ற உறுப்பினரும் அடங்குவார் என அலாஸ்கா (Alaska) அதிகாரிகள் தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கெனாய் தீபகற்பத்தில் உள்ள நகரமான சோல்டோட்னாவில் உள்ள விமான நிலையத்திற்கு அருகே நடந்த விபத்தில் யாரும் தப்பிக்கவில்லை என அலாஸ்கா மாநில துருப்புக்கள் எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


இப்பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாநில பிரதிநிதி கேரி நாப் (Gary Knopp) ஒரு விமானத்தில் தனியாக இருந்தார். மற்ற விமானம் தென் கரோலினாவிலிருந்து நான்கு சுற்றுலாப் பயணிகளையும், கன்சாஸிலிருந்து ஒரு கைடையும் சோல்டோட்னாவிலிருந்து ஒரு விமானியையும் ஏற்றிச் சென்றதாக துருப்புக்கள் தெரிவித்தனர்.


துருப்புக்களின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட ஏழு பேரும் அதே இடத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.


விபத்துக்குள்ளான வாகனங்களின் எச்சங்கள் ஒரு நெடுஞ்சாலையில் விழுந்தன. இந்த நெடுஞ்சாலை பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டது.


ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் விமானங்களில் ஒன்றை டி ஹவில்லேண்ட் டி.எச்.சி -2 பீவர் என அடையாளம் கண்டுள்ளது. இந்த விபத்து குறித்து FAA மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரித்து வருகின்றன.


67 வயதான நாப் குடியரசுக் கட்சிக்காரராகவும், மாநில மன்றத்தின் இரு கட்சி பெரும்பான்மையின் உறுப்பினராகவும் இருந்தார். அவரது மறைவுக்கு பல சகாக்கள் இரங்கல் தெரிவித்தனர்.


"கேரி நாப்பினைக் கொன்ற இந்த விபத்து என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.” என்று அவை சபாநாயகர் பிரைஸ் எட்மொன், ஒரு அறிக்கையில் தெரிவித்தார். கேரி ஒரு தனித்துவமான தலைவராக இருந்தார். அவர் தனது மாவட்டத்திற்காக அயராது உழைத்தவர். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று என அனைவரும் கருதுகிறார்கள்.


இந்த விபத்தில் இறந்த மற்றவர்கள், பைலட் கிரிகோரி பெல், 67, கைட் டேவிட் ரோஜர்ஸ், 40, மற்றும் தென் கரோலினா பயணிகள் என அடையாளம் காணப்பட்டனர். இந்தப் பயணிகள் காலேப் ஹல்சி, 26; ஹீதர் ஹல்சி, 25; மேக்கே ஹல்சி, 24; மற்றும் கிர்ஸ்டின் ரைட், 23 என்று அறியப்பட்டுள்ளது.


இதற்கு முன்னர், அலாஸ்காவில் 2019 மே மாதம் கெட்சிகன் அருகே இப்படிப்பட்ட விமான விபத்து நடந்தது. அப்போது க்ரூஸ் பயணங்களை ஏற்றிச் சென்ற இரண்டு விமானங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில் 6 பேர் கொல்லப்பட்டனர். அந்த விபத்தில் தப்பிய 10 பேர் அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டனர்.