புதுடில்லி: ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் இந்திய நாடாளுமன்றம் எடுத்த நடவடிக்கை உலகம் முழுவதும் ஆதரவு கிடைத்துள்ளதால், பாகிஸ்தான் கலக்கத்தில் மிகுந்த உள்ளது. ஆனாலும் அங்குள்ள சில அரசியல் தலைவர்களை போல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடியும் ஜம்மு-காஷ்மீர் விசியத்தில் விஷத்தை கக்கி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி ட்வீட் மூலம் பிரதமர் நரேந்திர மோடி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதே நேரத்தில், தனது நாட்டு பிரதமர் இம்ரான் கானை பாராட்டு உள்ளார்.


ஷாகித் அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜம்மு-காஷ்மீர் குறித்து கூறியது, 


தனது முதல் ட்வீட்டில், "காஷ்மீரில் நடைபெற்று வரும் வன்முறை மற்றும் மிருகத்தனத்தைத் தடுக்க ஐ.நா. தரப்பில் இருந்து கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்று நம்புகிறோம். பிரதமர் நரேந்திர மோடியின் இந்த நடவடிக்கைக்கு பெரும்பாலான இந்தியர்கள் ஆதரவாக இல்லை, இந்த நேரத்தில் காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த அவர்கள் முன்வர வேண்டும். காஷ்மீரில் தொடர்ந்து நடைபெற்று வரும் மனிதாபிமானமற்ற தன்மையை உடனடியாக நிறுத்த வேண்டும்."


அதேபோல தனது அடுத்த ட்வீட்டில், "பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை டேக் செய்து, 'அநீதியையும் கொடுங்கோன்மையையும் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. காஷ்மீரில் விரைவில் ஒரு நல்ல தீர்வை எதிர்பார்க்கிறோம். காஷ்மீரில் அமைதியை மீட்டெடுப்பதற்கான உங்கள் முயற்சிகளை நான் முழு மனதுடன் பாராட்டுகிறேன்.


இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கூறியுள்ளார்.


ஷாகித் அஃப்ரிடி இப்படி பேசுவது இது முதல்முறை கிடையாது. புல்வாமா தாக்குதல் நடந்தபோதும் இது போன்று ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி காஷ்மீரில் ஆக்கிரமிப்பு மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் அப்ரிடி கூறினார்.