நாளை கூடுகிறது பாகிஸ்தான் நாடாளுமன்றம்! பிரதமராக ஷபாஸ் ஷெரிப் தேர்வு?
நாடாளுமன்ற எதிர்க்கட்சியான முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவராக உள்ள ஷபாஸ் ஷெரிப் புதிய பிரதமராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடந்த வாரம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.
இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்றிரவு 1.30 மணியளவில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைப்பெற்றது.
அப்போது நாடாளுமன்றத்தின் 342 உறுப்பினர்களில் 174 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர்.
இதன் மூலம் நம்பிக்கையில்லா தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. இதனால், பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
அதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கானை நீக்கி அந்நாட்டு நாடாளுமன்றம் உத்தரவிட்டது.
மேலும் படிக்க | ‘உடனடியாக மருந்துகளைக் கொடுங்க’ - உலக நாடுகளிடம் கைநீட்டும் இலங்கை டாக்டர்கள்
இந்நிலையில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறுகிறது.
மேலும், பாகிஸ்தான் எதிர்கட்சியான முஸ்லீம் லீக்-நவாஸின் அயாஸ் சாதிக், புதிய பிரதமருக்கான வேட்புமனுக்களை இன்று மதியம் 2 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், பிற்பகல் 3 மணிக்குள் ஆய்வு செய்யப்படும் என்றும் முன்னதாக தெரிவித்திருந்தார்.
மேலும் இதன் தொடர்ச்சியாக, திங்கட்கிழமை காலை (ஏப்ரல் 11) 11 மணிக்கு அமர்வு கூடவுள்ளது. அப்போது புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், நாடாளுமன்ற எதிர்க்கட்சியான முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவராக உள்ள ஷபாஸ் ஷெரிப் புதிய பிரதமராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வேட்பாளராக ஷபாஸ் ஷெரிப் முறைப்படி இன்று முன்மொழியப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க | பணக்காரனா நீ? வரி கட்டு! செல்வந்தர்களுக்கு வரி விதிக்கும் இலங்கை
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR