வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து, சுமார் 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த பக்ராம் விமானப்படை தளத்தை சீனா கைப்பற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்றும் முன்னாள் மூத்த அமெரிக்க தூதர் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்காவின் முன்னாள் தூதர் நிக்கி ஹேலி புதன்கிழமை ஃபாக்ஸ் நியூஸிடம் இதை தெரிவித்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம், இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அதன் முக்கிய நட்பு நாடுகளை அணுகி அந்த நாடுகளுக்கு தங்கள் ஆதரவு இருப்பதை உறுதிபடுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.


"இரண்டாவதாக, உலகம் முழுவதும் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சியை அமெரிக்கா மேற்கொள்கிறது என்பதை அமெரிக்க அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் தற்போது ஜிஹாதிகள் (Taliban Jihadis) பெற்றுள்ள இந்த தார்மீக வெற்றியால், உலகெங்கிலும் ஜிகாதிகளின்  பெரிய ஆட்சேர்ப்பு பிரச்சாரம் நடக்கும். இதை சமாளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.


ALSO READ: Afghan Update: கண்மூடித்தனமான கொண்டாட்டம், வெற்றிக் களிப்பின் உச்சியில் விபத்து!!


"அமெரிக்கா பாதுகாப்பாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். நமது சைபர் பாதுகாப்பு வலுவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் ரஷ்யா போன்ற நாடுகள் தொடர்ந்து நமது இணைப்புகளை ஹேக் செய்ய முயற்சி எடுத்து வருகிறார்கள். சீனா மீதும் ஒரு கண் தேவை. ஏனெனில், பக்ராம் விமானப்படை தளத்தை தன் வசப்படுத்துவதில் சீனா உன்னிப்பாக உள்ளது தெரிகிறது” என்று ஹேலி குறிப்பிட்டார்.


"சீனா (China) ஆப்கானிஸ்தானில் சில இடங்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, பாகிஸ்தானையும் பயன்படுத்தி,  இந்தியாவிற்கு எதிராக வலிமை பெற முயற்சிக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஆகையால் இந்த பகுதிகளில் இன்னும் அதிக பிரச்சனைகள் உருவாக உள்ளன. நமது கூட்டாளி நாடுகள் மற்றும் நமது நட்பு நாடுகளை நாம் பாதுகாக்க வேண்டும். நமது ராணுவத்தை நவீனப்படுத்துவது, மற்றும் சைபர் குற்றங்கள் மற்றும் பயங்கரவாத குற்றங்களுக்கு எதிராக நாம் தயாராக இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துவது ஆகிய பணிகளில் நாம் ஈடுபட வேண்டும்"என்று ஒரு கேள்விக்கு பதிலளித்த நிக்கி தெரிவித்தார்.


ஆப்கானிஸ்தானில் (Afghanistan) இருந்து அமெரிக்கப் படைகளை ஒழுங்கற்ற முறையில் திரும்ப அழைத்து வந்ததற்காக பைடனை ஹேலி கடுமையாக சாடினார். "அதிபர் பைடன் அளித்த அந்த உரையின் முடிவில், இது ஜோ பைடனின் கையாலாகாத ஆட்சிமுறையின் துவக்கம் என்பது தெரிந்தது” என்று அவர் கூறினார்.


அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக ஹெய்லி தெரிவித்தார்.


"அமெரிக்க படைகள் சென்று விட்டதால், ஜிஹாதிகள் தெருக்களில் கொண்டாடுகிறார்கள். ஏனெனில், அவர்களுக்கு பரிசாக, அமெரிக்கா, பில்லியன் டாலர்கள் மதிப்பிலான உபகரணங்கள் மற்றும் வெடிமருந்துகளை விட்டுச் சென்றுள்ளது.” என்று சாடினார் நிக்கி ஹெய்லி.


அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலிருந்து விலகி விட்டதால், போர் முடிந்து விட்டது என்று கூற முடியாது. உலகம் மிக பயங்கரமான தருணத்தில் தற்போது இருக்கிறது என்று எச்சரித்தார் நிக்கி ஹெய்லி.


ALSO READ: ஆப்கானிலிருந்து வெளியேறிய கடைசி அமெரிக்க வீரர்; அடுத்தது என்ன?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR