புதுடெல்லி: நீங்கள் அடிக்கடி பீட்சா பர்கர் சாப்பிடுபவரா? உங்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி காத்திருக்கிறது. உலகின் மிக பிரபலமான பீட்சா பர்கர் உணவகங்களில் உளவு பார்க்கும் பணி நடப்பதாக ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தி வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆம்!! இது உண்மைதான். மெக்டொனால்டில் பணிபுரியும் ஒரு ஊழியரே இந்த செய்தியை அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மெக்டொனால்டில் உளவு பார்க்கிறீர்களா?


'தி சன்' இதழில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இந்த உளவு குற்றச்சாட்டு வெளியான பிறகு, அது தொடர்பான விவாதம் சமூக ஊடகங்களில் தீவிரமடைந்துள்ளது. இதன்படி, உங்கள் டேபிளுக்கு வரும் டெலிவரி பாய் அல்லது 'மெக்டி' கவுண்டரில் உட்கார்ந்திருக்கும் ஊழியர் என யார் வேண்டுமானாலும் உங்கள் தனிப்பட்ட பேச்சைக் கேட்கலாம் மற்றும் அனுமதியின்றி உங்கள் புகைப்படத்தையும் எடுக்கலாம் என தெரிய வந்துள்ளது.


மெக்டொனால்டில் (McDonalds) பணிபுரியும் ஒரு ஊழியர் மக்களுக்கு தெரியாத இந்த ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த மெக்டொனால்ட் ஊழியர் ஒரு டிக்டாக் பயனர். இவரது பதிவு வைரலானவுடன் பர்கர் பிரியர்கள் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.


டிக்டாக் பயனர் @charlton.a தனது வீடியோவில் “மெக்டொனால்டின் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் பேசுவதைக் கேட்க முடியும் என்று கூறியுள்ளார். மைக் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் ஊழியர்களால் பேச்சைக் கேட்க முடியும். நீங்கள் உங்கள் மேஜையில் அல்லது கவுண்டரில் இருந்தால் ஊழியர்கள் உங்கள் பேச்சை எளிதாக கேட்க முடியும்.” என்று கூறியுள்ளார்.


உங்கள் உணவை ஆர்டர் செய்ய வாடிக்கையாளர்கள் பேசும் ஒவ்வொரு சொல்லையும் ஊழியர்கள் கேட்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.


டிரைவ்-த்ரூ விண்டோ


ஊழியரின் கூற்றுப்படி, அவுட்லெட்டில் நடக்கும் பணிகள் சிறப்பாக நடக்க அனைத்து மேசைகளின் அருகிலும் சில கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.  அந்த கேமராக்கள் வாடிக்கையாளர்களின் முகப்பு படங்களை எடுக்கும்.


ALSO READ: வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை; கண்டனம் தெரிவித்துள்ள ஜப்பான், தென் கொரியா..!!


இந்த தகவல்களை வெளிப்படுத்திய ஊழியரின் பெயர் சார்ல்டன். அந்த மேசையில் எந்த ஆர்டரை வழங்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள இந்த படங்கள் உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்


நிறுவனத்தின் ஊழியரின் வெளிப்பாட்டின் படி, முதலில் வாடிக்கைய்யாளர்களின் பேச்சுகள் கேட்கப்படுகின்றன. இரண்டாவது உண்மை என்னவென்றால், அவர்களது படமும் எடுக்கப்படுகிறது. மக்களுக்கு தெரியாத மூன்றாவது இரகசியம் அல்லது விஷயம் என்னவென்றால், இந்த பன்னாட்டு நிறுவனம் நியூசிலாந்தில் உள்ள மெக்டொனால்ட்ஸ் கடைகளிலும் ரெசிபி புத்தகங்களையும் விற்கிறது.


மெக்டொனால்டு ஊழியரின் தகவலுக்குப் பிறகு சமூக ஊடகங்களில் (Social Media) மக்கள் தங்கள் அதிருப்தியை காட்டி வருகின்றனர். மக்கள் இப்போது இது குறித்து தங்கள் கவலையை தெரிவித்து வருகின்றனர். மெக்டொனால்டு பற்றிய இந்த வெளிப்பாட்டிற்கு சில பயனர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர், சில நெட்டிசன்களும் இதை கேலி செய்துள்ளனர்.


ALSO READ: அழுவதற்கு தனி அறை! மன நலனுக்காக நிதி ஒதுக்கும் நாடு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR