அழுவதற்கு தனி அறை! மன நலனுக்காக நிதி ஒதுக்கும் நாடு!

'அழுகை அறை'  - ஸ்பெயின் நாட்டின் ,மார்ட்டி நகரில்  வித்தியாசமான அழுகை அறை அமைக்கப்பட்டுள்ளது

Written by - ZEE Bureau | Last Updated : Oct 18, 2021, 09:22 PM IST
அழுவதற்கு தனி அறை! மன நலனுக்காக நிதி ஒதுக்கும் நாடு!

ஸ்பெயின் :  இந்த இயந்திர உலகத்தில் ஒவொருவரும் ஒவ்வொரு இலக்கை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறோம்.மனிதனே இப்போது இயந்திரமாக மாறி சுழன்று கொண்டிருக்கிறான்.தொடர்ந்து இயங்கினால் இயந்திரம் பழுதடைய தானே செய்யும்,அதுபோல தான் ஓடி கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வெளியே சொல்ல இயலாத பல மன குமுறல்கள் இருக்கும். 

இருப்பினும் வெளியே சொல்லாமல் பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகி தங்களது வாழ்க்கையையே தொலைத்து கொண்டு இருக்கின்றனர்.பலர் ,மன அழுத்தத்தில் சிக்கி சின்னாபின்னமாகின்றனர் ,சிலரோ இதிலிருந்து தங்களை வெளிக்கொணர பாடு படுகின்றனர்.  ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொரு மனிதனையும் மன அழுத்தம் தனது ஆதிக்கத்தினை செலுத்தி ஆட்டிப்படைத்து கொண்டு தான் இருக்கின்றது என்பதே நிதர்சனம்.மன அழுத்தத்திலிருந்து எப்படியாவது வெளிவர வேண்டும் என்ற சிந்தனையே  சிலரை மேலும் மன அழுத்தத்திற்கும் தள்ளி விடுகிறது .

இதனை கருத்திற்கொண்டு ஸ்பெயின் நாடு அட்டகாசமான ஒன்றை செய்துள்ளது,அது தான் 'அழுகை அறை'  ஸ்பெயின் நாட்டின் ,மார்ட்டி நகரில் தான் இந்த வித்தியாசமான அழுகை அறை அமைக்கப்பட்டுள்ளது.மக்களின் மன அழுத்தத்தை போக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது தான் இந்த அறை. 

crying

இந்த அழுகை அறைக்கு கவலையிலும் ,மன அழுத்ததிலும் சிக்கி தவிக்கும் பலரும் வருகின்றனர் .இவ்வாறு பலரும் வர இந்த அறைக்குள் அப்படி என்னதான் இருக்கிறது என்ற கேள்வி உங்களுக்குள் கண்டிப்பாக எழும்.அதாவது இந்த அறைக்குள் நீங்கள் நுழைந்ததுமே 'இந்த அறைக்குள் நுழைந்து அழுக எனக்கும் கவலை இருக்கிறது' என்பது போன்ற சில பல வாக்கியங்கள் காணப்படும்.  மேலும், இந்த அறைக்குள் வருபவர்கள் தாங்கள் யாரிடம் தங்கள் மன குமுறல்களை கொட்டி தீர்க்க வேண்டுமோ, அவர்களுடன் தொலைபேசி வழியாக உரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தங்களின் கவலைகளை காத்து கொடுத்து கேக்க ஆளில்லையே என்று கருத்துபவர்களுக்கு உளவியல் ஆலோசகர்கள் பலர் இங்கு இருக்கின்றனர். அங்குள்ள உளவியல் நிபுணர்களிடமும் தங்களது மனதில் தேங்கி கிடைக்கும் கவலைகளை அலுத்து கொட்டி தீர்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது ..

ஸ்பெயின் நாட்டில் பத்தில் ஒருவருக்கு உளவியல் ரீதியான பாதிப்பு இருப்பது கண்டறிப்பட்டதையடுத்து,உளவியல் நிபுணர்களால் ஆலோசனை செய்யப்பட்டு இந்த அழுகை அறையானது ஆரமிக்கப்பட்டுள்ளது.மேலும் மக்களின் மன நலனை பேண அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .  இந்த அழுகை அறைக்கு மக்கள் மத்தியில் பயங்கர வரவேற்பு கிடைத்துள்ளது.நிபுணர்களின் இந்த புதிய யோசனையால் பலரும் தங்களது மன குமுறல்களை போக்க இந்த அறையை சிறந்த இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

ALSO READ உலகின் மிக நீண்ட லாக்டவுன்.. இனியாவது நிவாரணம் கிடைக்குமா என ஏங்கும் மக்கள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

More Stories

Trending News