பாலத்தின் மீது கப்பல் மோதும் வீடியோ! சீட்டுக்கட்டு போல் சரியும் வாகனங்களில் இருந்தவர்களின் நிலை என்ன?
Baltimore Bridge USA Accident Viral : பிரமாண்ட கப்பல் மோதியதால் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து விழுந்த விபத்து வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது...
Bridge Collopse Video Viral : அமெரிக்காவின் மேரிலாந்தில் பால்டிமோரில் உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் (Francis Scott Key Bridge) செவ்வாய்க்கிழமை காலை இடிந்து விழுந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும், அதை உடனடியாக நமது கைக்குள்ளே கொண்டு வந்து சேர்ந்திடும் இணைய தள தொழில்நுட்பம், இதுபோன்ற எதிர்பாராத விபத்துக்களையும் நமக்கு உடனுக்குடன் தெரிவித்துவிடுகிறது.
நீரில் சென்றுக் கொண்டிருந்த கப்பல் ஒன்று பாலத்தின் மீது மோதியதில், பாலம் சீட்டுக்கட்டு சரிந்து விழுவது போல, சரசரவென இடிந்து விழுந்தது. பாலத்தில் சென்றுக் கொண்டிர்நுத வாகனங்களும், அப்படியே தண்ணீரில் விழும் காட்சிகளும் வீடியோவில் பதிந்துள்ளது.. இந்த விபத்து இன்று அதிகாலை 1.30 மணியளவில் நிகழ்ந்தது. மோசமான விபத்து பற்றியத் தகவல்களால், நகரம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.
பாலம் இடிந்து விழும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய பின்னரே, நகரத்தில் ஏற்பட்ட மோசமான விபத்து குறித்து மக்களுக்குத் தெரியவந்தது என்பது சமூக ஊடகங்களின் தாக்கம் எவ்வளவு என்பதை உணர்த்த போதுமானதாக உள்ளது.
மேலும் படிக்க | கடற்கரை மணலை எடுத்தால் ₹2 லட்சம் அபராதம்...
சரக்குகளை ஏற்றிக் கொண்டு வந்த சரக்குக் கப்பல் பாலத்தில் மோதும், அரிய தருணமும் வீடியோவில் படமாகியுள்ளது. பாலத்தில் கப்பல் மோதிய உடனே, பெரிய தீப்பிளம்பு தோன்றுவதையும், அது அப்படியே சரிவதையும் பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த வாகனங்கள் தண்ணீரில் விழுவதையும் பார்க்க முடிகிறது.
பாலத்தின் ஒரு பகுதி இடிந்து தண்ணீரில் விழுந்த உடன், அதில் சென்றுக் கொண்டிருந்த வாகனங்களும், சரசரவென தண்ணீரில் சரிவது பதற்றத்தை உருவாக்குகிறது. பார்ப்போரை பதற வைக்கும் கப்பல் விபத்து வீடியோவைப் பாருங்கள்...
விபத்தைத் தொடந்து , பிரான்சிஸ் ஸ்காட் கீ பிரிட்ஜை மூட மேரிலாந்து போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டது. "I-695 பாலத்தில் நடந்த சம்பவத்தை அடுத்து பாலத்தின் மீதுள்ள அனைத்து பாதைகளும் இரு திசைகளிலும் முற்றிலும் மூடப்பட்டுள்ளன" என்று இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மனித மூளையில் சிப்... எண்ணங்களால் கணிணி மவுஸை இயக்கும் பக்கவாத நோயாளி!
பலர் காணாமல் போயுள்ளனர் மற்றும் பலி எண்ணிக்கை பற்றிய விவரங்கள் இன்னும் வரவில்லை. அவசரகால பணியாளர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்ட நிலையில், பால விபத்தில் ஏற்பட்ட சேதத்தின் அளவை மதிப்பிடுவதிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பாலம் நகரின் போக்குவரத்து அமைப்பிற்கான முக்கிய இணைப்பாக இருந்தது. தற்போது பாலம் மூடப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கையில் சிரமம் ஏற்படக்கூடும். போக்குவரத்தை திசைதிருப்புவதற்காக மாற்றுப்பாதைகள் அமைக்கப்பட்டாலும், பயண நேரம் மற்றும் போக்குக்வரத்து நெரிசல் அதிகரிக்கும் என்று மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பாலம் இடிந்து விழும் வீடியோவை பார்க்கும் சமூக வலைதளவாசிகள், நீர் போக்குவரத்தால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. சிலர் இவ்வளவு பெரிய விபத்து மற்றும் இது தொடர்பான உடனடி நடவடிக்கைகளுக்கு பலர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | MS Dhoni: தலைவன்னா இவர் தான்! பெட்டியை தூக்கிச் செல்லும் தல தோனியின் வீடியோ வைரல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ