28 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து நீடிப்பதா, வெளியேறுவதா என்பது குறித்து நேற்று அந்நாட்டில் பொது வாக்கெடுப்பு நடந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்து பெரும்பாலும் வெளியேற வாய்ப்பில்லை என தகவல் வெளியானது. மேலும் பிரபல ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள் 51 சதவீதத்தினர் ஐரோப்பிய ஒன்றியத்தில்தான் இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தன. இதனால் ஐரோப்பிய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன. அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. பல்வேறு துறைகளுக்காக குறியீட்டு எண்கள் உயர்ந்தன.


இங்கிலாந்து பொதுவாக்கெடுப்பில் வெற்றிபெறும் என்று பிபிசி கணித்து உள்ளது.


ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் என்ற அச்சத்தால் இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை கண்டுள்ளது. 


பிரிட்டன் நாணயமான பவுண்டின் மதிப்பும் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. 9 சதவிதம் சரிவு கண்டுள்ளது. 1985-ல் இருந்து முதல்முறையாக பிரிட்டிஷ் நாணயமான பவுண்டின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து கூறிஉள்ளனர்.