Lab-Grown Meat விற்பனையை அங்கீகரிக்கும் முதல் நாடாக ஆனது சிங்கப்பூர்
உடல்நலம், விலங்கு நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றிய நுகர்வோர் கவலைகள் காரணமாக வழக்கமான இறைச்சிக்கு மாற்றாக ஒரு உணவு பொருளை உருவாக்க வேண்டிய தேவை அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இறைச்சியை (Lab-Grown Meat) விற்பனை செய்ய அனுமதிக்கும் உலகின் முதல் அரசாங்கமாக சிங்கப்பூர் ஆகியுள்ளது.
செவ்வாயன்று, சிங்கப்பூர் அரசாங்கம் சான் பிரான்சிஸ்கோ ஸ்டார்ட்-அப் நிறூவனமான, ஈட் ஜஸ்ட் இன்கார்பரேஷன்,- (Eat Just Inc.) என்னும் நிறுவனத்திற்கு, ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட சிக்கனை விற்க அனுமதி அளித்தது.
இது விலங்கு உயிரணுக்களிலிருந்து நேரடியாக உருவாக்கப்பட்ட உண்மையான, உயர்தர இறைச்சி. இதனை உட்கொள்வது முற்றிலும் பாதுகாப்பானது என்று ஈட் ஜஸ்ட் நிறுவனம் புதன்கிழமை கூறினார்.
எந்தவொரு கோழிகளையும் கொலை செய்யாமல், அந்த விலங்கின் உயிரணுக்களிலிருந்து உருவாக்கப்பட்ட தயாரிப்பு, ஒரு உயிரியக்கத்தில் (bioreactor) உருவாக்கப்பட்டது. இதில் அதிக புரதம் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனம் தற்போது உள்ளூர் உற்பத்தியாளருடன் இணைந்து பணியாற்றி வருகிறது, பின்னர் அதன் விற்பனையை மற்ற உணவகங்களுக்கும் விரிவுபடுத்துகிறது. நிறுவனம் இறைச்சியை நகட்களாக (nugget) விற்கப்படும் என்றும், முன்னதாக அவற்றின் விலை $ 50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த முயற்சியைப் பற்றி பேசுகையில், ஈட் ஜஸ்டின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜோஷ் டெட்ரிக், “நாம் பல நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இறைச்சி சாப்பிட்டு வருகிறோம், இதற்காக எப்போதும் ஒரு விலங்கைக் கொல்ல வேண்டி வருகிறது - இப்போது வரை இது தொடர்கிறது.” என்றார். இதன் தரம் குறித்த கவலை ஏதும் வேண்டாம் என்றும், இது உண்மையான சிக்கனை போலவே சுவை நிறைந்தது என்றார்.
உடல்நலம், விலங்கு நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றிய நுகர்வோர் கவலைகள் காரணமாக வழக்கமான இறைச்சிக்கு மாற்றாக ஒரு உணவு பொருளை உருவாக்க வேண்டிய தேவை அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
ALSO READ | விண்வெளியில் கழிவறை அமைக்கும் NASA... அதற்கான செலவு வெறும் 8700 கோடி தான்..!!!
இருப்பினும், ஒரு ஆய்வகத்தில் உள்ள விலங்கு தசை செல்களிலிருந்து வளர்க்கப்படும் இத்தகைய இறைச்சி, அதிக உற்பத்தி செலவை உள்ளடக்கியதாக உள்ளது
இதற்கிடையில், உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்கள். ஆய்வகத்தால் வளர்க்கப்பட்ட மீன், மாட்டிறைச்சி மற்றும் சிக்கன் ஆகியவற்றை பரிசோதித்து வருகின்றன, மாற்று இறைச்சி சந்தையில் வளர்ச்சி என்ற நம்பிக்கை நிலவுகிறது.
2029 ஆம் ஆண்டில், இதற்கான சந்தை, 140 பில்லியன் டாலர் மதிப்புள்ளதாக இருக்கும் என்று பார்க்லேஸ் (Barclays) மதிப்பிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, இந்தியாவின் ஐ.ஐ.டி-குவஹாத்தியின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சியை உருவாக்கியுள்ளனர். இது ஒரு உயிரை கொல்வதை தடுக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கை எனக் கூறலாம்.
ALSO READ | போபால் விஷ வாயு கசிவு நடந்து 36 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்கிறது நீதிக்கான போராட்டம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR