Thai New Year: தாய்லாந்து நாட்டு மக்களின் புத்தாண்டு சோங்க்ரான் என்று அழைக்கப்படுகிறது. தாய் தேசிய புத்தாண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 9 அன்று கொண்டாடப்படுகிறது, 2018 ஆம் ஆண்டில் தாய்லாந்து அமைச்சரவை,  திருவிழாவை நாடு முழுவதும் ஏழு நாட்களுக்கு அதாவது ஏப்ரல் 9-16 வரை நீட்டித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"சோங்க்ரான்" என்ற சொல் இந்தியாவின் சாங்கிராந்தி என்ற வார்த்தையுடன் ஒத்துப்போகிறது. தெற்காசியாவின் பல இன மக்களிடையே புத்தாண்டு இந்த சமயத்தில் கொண்டாடப்படுகிறது.  தமிழ் புத்தாண்டும் இந்த சமயத்தில் கொண்டாடப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


சோங்க்ரான் நீர் விழா ஏன் கொண்டாடப்படுகிறது?
நீர் என்பது தூய்மையானது, பாவங்களைப் போக்குவது என்ற நம்பிக்கையிலிருந்து இந்த பாரம்பரியம் உருவானது, தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொள்வதன் மூலம், மக்கள் தங்கள் பாவங்கள் மற்றும் துரதிர்ஷ்டங்களிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவார்கள் என்பது தாய்லாந்து மக்களின் நம்பிக்கை ஆகும். சோங்க்ரான் மத சடங்குகள், பாரம்பரிய நடனங்கள், இசை மற்றும் விருந்துகளுடன் கொண்டாடப்படுகிறது.


சோங்க்ரான் நீர் திருவிழாவின் போது, பழையன கழித்துவிட்டு, புதியதை வரவேற்கும் அடையாளமாக மக்கள் ஒருவர் மீது ஒருவர் தண்ணீரைத் தெளித்துக் கொள்கிறார்கள். தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களைப் போலவே, தாய்லாந்து மக்கள் சோங்க்ரான் திருவிழாவின் போது கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்துகின்றனர்.


மேலும் படிக்க | மங்கலங்கள் நிறைந்த சோபகிருது! உலகத்தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


சோங்க்ரான் நீர் திருவிழாவில் குளிக்கும் புத்தர்
சோங்க்ரான் நீர் திருவிழாவில், தாய்லாந்து மக்கள் புத்தரின் சிலைகளை வணங்குகிறார்கள். பலர் துறவிகளுக்கு பிரசாதம் வழங்குகிறார்கள். சோங்க்ரான் திருவிழாவின் புத்தர் சிலைகளுக்கு தூய்மையின் அடையாளமான தண்ணீர் ஊற்றுகின்றனர். இது ஒரு சடங்காகவே செய்யப்படுகிறது.



தொற்றுநோய்க்குப் பிந்தைய முதல் சோங்க்ரான் நீர் திருவிழா
கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு, சோங்க்ரான் நீர் திருவிழா இப்போது முழு உற்சாகத்தில் நாட்டில் கொண்டாடப்படுகிறது. மக்கள் மகிழ்ச்சியாக பண்டிகை சூழ்நிலையை அனுபவிக்க்கின்றனர்.


சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளின் கொண்டாட்டம்
இந்த சோங்க்ரான் நீர் திருவிழா, மிகப்பெரிய தண்ணீர் திருவிழா என்பதும் மக்கள் தெருவில் இறங்கி, தெரிந்தவர் தெரியாதவர் என எந்த வித்தியாசமும் இன்றி கொண்டாடுவதும் குறிப்பிடத்தக்கது. சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் இந்த ஆண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்கின்றனர்.


யானகளுடன் சோங்க்ரான் நீர் திருவிழா 


தாய்லாந்து மக்கள் பலர் யானைகளுடன் கிராமப்புறங்களில் சோங்க்ரானைக் கொண்டாடுகிறார்கள். யானைகள் தாய்லாந்தின் தேசிய விலங்காக இருப்பதால், நாட்டின் பல யானைகள் சரணாலயங்கள் மற்றும் ஓய்வு பூங்காக்கள் இந்த ராட்சதர்களுடன் கொண்டாட்டங்களில் பங்கேற்க சோங்க்ரான் தினத்தில் பார்வையாளர்களை வரவேற்கின்றன.


ஹோலி பண்டிகையைப் போன்ற நீர் திருவிழா


பாங்காக்கில், தாய் புத்தாண்டான சோங்க்ரானை வாட்டர் கன்கள் மற்றும் ஹோஸ் பைப்புகள் கொண்டு, ஒருவர் மீது மற்றொருவர் தண்ணீரை பீய்ச்சியடித்துக் கொண்டாடினார்கள். பல ஆண்டுகளாக கடுமையான கோவிட் விதிமுறைகளுக்குப் பிறகு, மெகாலோபோலிஸ் சுமார் 200 இடங்களில் பெரிய அளவிலான நீர் பீய்ச்சியடிக்கும் கொண்டாட்டங்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டன.


மேலும் படிக்க | கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை "மேம்பட்ட" ICBM சோதனையை நடத்தியது ரஷ்யா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ