வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் நலமாக தான் இருக்கிறார் -தென் கொரியா...
வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னின் உடல்நலம் குறித்து அதிகரித்து வரும் ஊகங்களுக்கு மத்தியில், தென் கொரியா கிம் ஜாங் உன் `உயிருடன் இருக்கிறார்` என்று செய்திகள் வெளியிட்டுள்ளது.
வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னின் உடல்நலம் குறித்து அதிகரித்து வரும் ஊகங்களுக்கு மத்தியில், தென் கொரியா கிம் ஜாங் உன் "உயிருடன் இருக்கிறார்" என்று செய்திகள் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் சிறந்த வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் மூன் சுங்-இன் தெரிவிக்கையில் "எங்கள் அரசாங்க நிலைப்பாடு உறுதியானது, கிம் ஜாங் உன் உயிருடன் இருக்கிறார், அவர் ஏப்ரல் 13 முதல் வொன்சன் பகுதியில் தங்கியிருக்கிறார். சந்தேகத்திற்கிடமான அசைவுகள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை" என்று குறிப்பிடுகின்றார்.
முன்னதாக, தென் கொரியாவை மையமாகக் கொண்ட ஆன்லைன் செய்தித்தாள் டெய்லி NK, "அதிகப்படியான புகைபிடித்தல், உடல் பருமன் மற்றும் அதிக வேலை பலு காரணமாக கிம் நோய்வாய் பட்டார் எனவும், வட கொரிய தலைவர் தற்போது ஹியாங்சன் கவுண்டியில் உள்ள ஒரு வில்லாவில் குணமடைந்து வருவதாகவும்" குறிப்பிட்டுள்ளது. டெய்லி NK-யைப் பொறுத்தவரை, பெரும்பாலான மருத்துவர்கள் கிம்மின் நிலை மேம்பட்டுள்ளதாக மதிப்பிட்ட பின்னர் ஏப்ரல் 19 அன்று பியோங்யாங்கிற்கு திரும்பினர்.
தனிமைப்படுத்தப்பட்ட வடகொரியத் தலைவர், ஆட்சியாளர் கிம் ஜாங்-உனுக்கு சொந்தமான ஒரு சிறப்பு ரயில் ஒரு ரிசார்ட் நகரத்தில் காணப்பட்டதாக வாஷிங்டனை தளமாகக் கொண்ட வட கொரியாவின் கண்காணிப்புத் திட்டம் கூறியுள்ளது. கிம் மற்றும் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் பயன்பாட்டிற்காக 'தலைமை நிலையம்' ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
"ரயிலின் இருப்பு வட கொரியத் தலைவர் இருக்கும் இடத்தை நிரூபிக்கவில்லை அல்லது அவரது உடல்நலம் குறித்து எதையும் குறிக்கவில்லை, ஆனால் கிம் நாட்டின் கிழக்கு கடற்கரையில் ஒரு உயரடுக்கு பகுதியில் தங்கியிருப்பதாக வெளியான தகவல்களுக்கு இது எடை கொடுக்கிறது" என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
வட கொரியாவின் உயர்மட்ட தலைவர் கிம் ஜாங்-உன் கோமா நிலையில் இருப்பதாக கூறப்படும் நிலையிலும், 36 வயதான சர்வாதிகாரி இறந்துவிட்டார் என்று சீனா மற்றும் ஜப்பானில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.