மீண்டும் உச்சம் தொடும் கோவிட் தொற்று: தென் கொரியாவில் திடீர் ஏற்றம்
தென் கொரியாவில் இதுவரை நாடு 4,46,41,667 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இது மொத்த மக்கள் தொகையில் 87.0 சதவீதம் ஆகும்.
தென் கொரியாவின் தினசரி கோவிட்-19 எண்ணிக்கை ஒரு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. ஓமிக்ரான் பரவலுக்கு மத்தியில், தொற்று எண்ணிக்கை முதல் முறையாக 22,000 ஐத் தாண்டியுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு முகமையின் (KDCA) படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 22,907 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 9,07,214 ஆக உயர்ந்துள்ளது. தினசரி கேஸ்லோடு முந்தைய நாளில் 20,269 ஆக இருந்தது. இரண்டு நாட்களுக்கு மேல் தினசரி 20,000 க்கு மேல் தொற்று எண்ணிக்கை இருந்து வருவது கலவையை அளித்து வருகிறது.
ஓமிக்ரான் மாறுபாட்டின் (Omicron Variant) விரைவான பரவலுக்கு மத்தியில் சியோல் பெருநகரப் பகுதியில் கிளஸ்டர்களில் ஏறபட்ட நோய்த்தொற்றுகளால் சமீபத்திய அதிகரிப்பு உந்தப்பட்டது. இது அதி வேகமாக பரவி வருகிறது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 5,191 பேர் சியோலை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | IMMIGRATION LOANS: வெளிநாட்டில் செட்டில் ஆக வட்டியில்லா கடன்
கியோங்கி (Gyeonggi) மாகாணம் மற்றும் மேற்கு துறைமுக நகரமான இங்கியானில் (Incheon) வசிக்கும் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முறையே 6,532 மற்றும் 1,533 ஆக உள்ளது.
மாநகரம் அல்லாத பகுதிகளிலும் வைரஸ் பரவியுள்ளது. தலைநகர் அல்லாத பகுதிகளில் புதிய தொற்றுநோய்களின் எண்ணிக்கை 9,517 அல்லது மொத்த உள்ளூர் பரவலில் 41.8 சதவீதமாக உள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில், 134 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து மொத்த எண்ணிக்கை 25,808 ஆக உயர்த்தப்பட்டது.
தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு தீவிர நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 274 ஆக உள்ளது. இது முந்தைய நாளை விட நான்கு குறைவாகும்.
சுமார் 25 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த இறப்பு எண்ணிக்கை 6,812 ஆக உயர்ந்துள்ளது. மொத்த இறப்பு விகிதம் 0.75 சதவீதமாக இருந்தது.
தென் கொரியாவில் (South Korea) இதுவரை நாடு 4,46,41,667 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் (Covid Vaccination) செலுத்தப்பட்டுள்ளன. இது மொத்த மக்கள் தொகையில் 87.0 சதவீதம் ஆகும். முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 43,997,129 அதாவது மக்கள்தொகையில் 85.7 சதவீதம் ஆகும்.
பூஸ்டர் டோஸ்களைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 27,267,684, அதாவது மொத்த மக்கள் தொகையில் 53.1 சதவீதமாக உள்ளது.
ALSO READ | North Korea: 5 மாதங்களுக்கு பிறகு கணவன் கிம் ஜாங் உன்னுடன் பொதுவில் தோன்றிய மனைவி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR