IMMIGRATION LOANS: வெளிநாட்டில் செட்டில் ஆக வட்டியில்லா கடன்

வெளிநாடு செல்ல வேண்டும் என்று கனவு காண்பவர்களுக்கு வட்டியில்லா கடன் கிடைக்கும். அமெரிக்கா, கனடா அல்லது ஆஸ்திரேலியாவிற்கு செல்பவர்களுக்கு இந்த கடன் கிடைக்கும்.  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 3, 2022, 05:00 PM IST
  • வெளிநாட்டில் செட்டில் ஆக வட்டியில்லா கடன்
  • இது இந்தியாவில் கிடைக்கும் கடன்
  • வட்டியும் இல்லை, தவணையும் இல்லை, செட்டில் ஆன பிறகு திருப்பிக் கொடுக்கலாம்
IMMIGRATION LOANS: வெளிநாட்டில் செட்டில் ஆக வட்டியில்லா கடன் title=

வெளிநாடு செல்வது அனைவருக்கும் எளிதானது அல்ல, உங்கள் கனவை அடைய நீங்கள் கடன் வாங்க வேண்டும் என்றால், அதற்கான செயல்முறை ஒரு பெரிய சுமையாக இருக்கும்.

இருப்பினும், குஜராத்தில் ஒரு பகுதி உள்ளது, அங்கு சட்டப்பூர்வமாக அல்லது சட்டவிரோதமாக குடியேறத் திட்டமிடுபவர்கள் 0% வட்டியில் லட்சக்கணக்கில் கடன் வாங்கலாம். அது மட்டுமல்லாமல், பணத்தைத் திருப்பித் தர வேண்டிய கட்டாயமும் இல்லை.

கடன் வாங்குபவர்கள், அதற்கான தவணைத்தொகையான EMI செலுத்த வேண்டியதில்லை.

ALSO READ | மாயமாய் மறைந்த மதுவின் கடவுள்! 50 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட சிலை

பணத்தை கடன் வாங்கியவர்கள், வெளிநாட்டில் குடியேறும்போது, ​​அவர்கள் இங்கு பெறும் கடன் தொகையை விட இரண்டு மடங்கு தொகையைத் திருப்பித் தருகிறார்கள்.

அமெரிக்கா, கனடா அல்லது ஆஸ்திரேலியாவிற்கு செல்பவர்களுக்கு இந்த கடன் கிடைக்கும்.  

குஜராத்தின் காந்திநகர் மாவட்டத்தில் உள்ள கலோல் நகரில் வசிக்கும் 21 வயதான அங்கித் படேல், அமெரிக்கா செல்ல விரும்பினார், ஆனால் வங்கியில் கடன் வாங்க அவருக்கு நிதி வசதி இல்லை.

அவர் ஒரு உள்ளூர் அறக்கட்டளையை அணுகினார், இது வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்று கனவு கண்ட இளைஞர்களுக்கு நிதியளிப்பதற்காக சமூகத்திலிருந்து பணத்தை திரட்டியது.

ALSO READ | அமெரிக்க-கனேடிய எல்லையில் இறந்த இந்திய குடும்பம்

ஒரு வாரத்தில், பணம் ஏற்பாடு செய்யப்பட்டு, அங்கித் தனது கனவை நிறைவேற்றினார். அவர் அமெரிக்க மாகாணமான பென்சில்வேனியாவில் குடியேறியவுடன், கடனாக வாங்கிய தொகையை இரண்டு மடங்கு தொகையை அறக்கட்டளைக்குத் திருப்பிக் கொடுத்தார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. வடக்கு மற்றும் மத்திய குஜராத்தில் உள்ள 'டோலாரியோ பிரதேசம்' என்ற பகுதியில் இதுபோன்ற பல அறக்கட்டளைகள் உள்ளன.

அவை வெளிநாட்டில் குடியேறுவதற்கான விருப்பத்தைத் தொடர இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் நிதி உதவி செய்கின்றன. உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, இந்த அறக்கட்டளைகள் முறைசாரா மற்றும் முக்கியமாக உள்ளூர் சமூகங்களால் நடத்தப்படுகின்றன.

ALSO READ | பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் ஆரிப் கான்

கனடாவின் எமர்சன் நகரத்திற்குக் அருகே ஜனவரி 19 அன்று சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற குஜராத்தி குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மைனஸ் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இறந்த தகவல் வெளியாகி அதிர்ச்சியில் உறைய வைத்தது. 

அந்த குடும்பத்தினர், குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் கலோல் தாலுகாவில் உள்ள டிங்குச்சா கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த கிராமத்தை சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒரு உறுப்பினராவது அமெரிக்கா, கனடா அல்லது ஆஸ்திரேலியாவில் குடியேறியதாக உள்ளூர்வாசி பவின் படேல் கூறினார்.

ALSO READ | ஆய்வகத்தில் இறைச்சி உற்பத்தி! எதிர்கால உணவுக்காக சீனாவின் திட்டம்

தங்கள் குடும்ப உறுப்பினர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் அளவுக்கு அந்த கிராமத்தில் வசிப்பவர்களுக்கு பண வசதி இருக்கிறது என்று அர்த்தம் இல்லை. 

ஒரு நபர் வெளிநாட்டிற்கு இடம்பெயர்வதற்கு சுமார் 15 லட்சம் முதல் 30 லட்சம் வரை தேவைப்படுகிறது. 'வெளிநாடு செல்லும் ஆண் அல்லது பெண்ணுக்கு அறக்கட்டளை பூஜ்ஜிய சதவீத வட்டியில் பணத்தை வழங்குகிறது.

அவர்கள், கடன் தொகையை தவணையிலும் செலுத்த வேண்டாம். வட்டியும் கிடையாது. ஆனால், கடன் வாங்கிய ஒருவர் வெளிநாட்டில் குடியேறியவுடன், அவர் அறக்கட்டளையில் இருந்து பெற்றதை விட அதிகமாகத் திருப்பித் தருகிறார். 

ALSO READ | தாய்லாந்து போகப்போறீங்களா? உங்களுக்கு ஒரு முக்கியமான நல்ல செய்தி!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News