இலங்கை நெருக்கடி: இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அவசரநிலையை இலங்கை அரசாங்கம் சனிக்கிழமை நீக்கியுள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை கருத்திற்கொண்டு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்மையில் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை உயர்வு, எரிபொருல் பற்றாக்குறை போன்றவற்றின் காரணமாக, தீவிரமடைந்த மக்கள் போராட்ட்டத்தை ஒடுக்கும் வகையில், ஆட்சி ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்கினர். அதனை தொடர்ந்து வன்மூறை தீவிரமடைந்து  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல தலைவர்களின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.


அதையடுத்து மஹிந்தா ராஜபக்‌ஷே பதவி விலகி, அங்கு பின்னர் ஏற்பட்ட அரசியல் முன்னேற்றத்தில் ரனில் விக்ரமசிங்க பிரதமரானார். 


சட்டம் - ஒழுங்கு மேம்படுவதைக் கருத்தில் கொண்டு, அவசரகாலச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த வேண்டாம் என்று அரசு முடிவு செய்துள்ளது. இலங்கையின் அதிபர்கோட்டாபய ராஜபக்ச ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக மே 6 நள்ளிரவு அவசரநிலையை அமல்படுத்தினார்.


இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அவசரநிலை நீக்கப்பட்டுள்ளதாக அதிபர் செயலகம் தெரிவித்துள்ளதாக 'ஹிரு நியூஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. அவசரநிலையை அமல்படுத்துவது அல்லது நீட்டிப்பது என்பது குறித்து நாடாளுமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும்.  அதிபர்அவசர நிலையை  அறிவித்த நிலையில்,  14 நாட்களுக்குள் அவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இருப்பினும், அவசரகாலச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


மேலும் படிக்க | WISE: இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்பும் மலிவான வழிமுறை


அவசர காலத்தின் போது, ​​எந்தவொரு நபரையும் கைது செய்வதற்கு, போலீஸாருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் வரம்பற்ற அதிகாரம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில், அரசுக்கு ஆதரவான மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது ஏற்பட்ட மோதல்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


முன்னதாக, பல மாதங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கை அரசு திவால் நிலையை அறிவித்தது. இலங்கை அரசு திவாலாகிவிட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் அறிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின.


இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது 1948ம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து, முதல் முறையாக இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால், இறக்குமதி செய்யப்படும் உணவு தானியங்கள் மற்றும் எரிபொருளுக்கு பணம் செலுத்த முடியாமல் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.


மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல முயன்ற 21 இலங்கையர்கள் கைது! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR