இலங்கை, மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி காவல் நிலைய பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் செல்லயிருந்த 21 பேரை காவல் துறை அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
கிரான்குளம் தர்மபுரம் பகுதியில் உள்ள கடற்கரையில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டள்ளனர்.
களுவாஞ்சிகுடி மற்றும் தாண்டியடி பகுதியில் பணியில் இருந்த காவல் துறை அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவர்கள் வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்தவர்கள் எனவும், சிறப்பு நடவடிக்கையில் நான்கு பெண்கள் உட்பட 21 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க | முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: முதல் முறையாக தமிழர் - சிங்களர் இணைந்து அஞ்சலி
கைது செய்யப்படும் போது இவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் இரண்டு படகுகளையும் காவல் துறை அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளது. மேலும் டன்கள் அளவிலான டீசலும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களும் படகும் காத்தான்குடி போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை காவல் துறை அதிரடிப்படையினர் மற்றும் காத்தான்குடி போலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் உச்சம் தொட்டுள்ள நிலையில், எரிபொருள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதால், அங்கே மக்களின் வாழ்க்கை ஒரு போராட்டமாக உள்ளது.
மேலும் படிக்க| Sri Lanka Crisis: மீண்டும் மீண்டும் இந்தியா நீட்டும் உதவிக்கரம், நெகிழும் இலங்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR