கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வியாழக்கிழமை பதவியேற்கிறார். உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளப்படவுள்ளதாக ஐஏஎன்எஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடிய பின்னர் விக்ரமசிங்கவின் நியமனம் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. இருப்பினும், விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு  (UNP),  ஒரு உறுபினர் மட்டுமே ள்ள நிலையில், எவ்வாறு பெரும்பான்மையை பெற முடியும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.


முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய இராஜினாமாவிற்கு பின்னர் விக்ரமசிங்க, இலங்கையின் பிரதமராக ஆறாவது தடவையாக பதவியேற்கவுள்ளார். 1993 முதல் இலங்கையின் பிரதமராக ஏற்கனவே 5 முறை பிரதமர் பதவி வகித்தவர் ரணில் விக்கிரமசிங்க என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : இலங்கையில் வலுக்கும் நெருக்கடி: ‘உள்ளாடை போராட்டத்தை’ துவக்கிய பொதுமக்கள்


இதனிடையே இன்று காலை ட்விட்டரில் பதிவிட்டுள்ள கோத்தபய ராஜபக்சே, நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட அதிபர் முறையை நீக்குவது தொடர்பாக பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார். அதிபரின் அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும் 19-வது சட்டத்திருத்தம் நிறைவேற்றப்படும் எனவும் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். முன்னதாக, புதிய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறக்கூடிய ஒரு பிரதமரால் நடத்தப்படும் என்று ராஜபக்சே கூறினார்.


ஒரு மாத காலமாக அரசியல் சார்பற்ற மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் மீது அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட வன்முறை மோதல்களைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்சே தனது பதவியை இராஜினாமா செய்தார். 
உணவு, எரிபொருள், மருந்து, சமையல் எரிவாயு, பல மணிநேரம் மின்வெட்டு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு உள்ளிட்ட கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில், ராஜபக்ச அரசு மற்றும் அதிபர் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


இதற்கிடையில், மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட 16 பேர் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 12  அரசியல் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிராக இலங்கை நீதிமன்றம் இன்று வெளிநாட்டு பயணத்தடை விதித்துள்ளது.


இந்த வாரம் கொழும்பில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கு விசாரணையில்,  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது மகன் நாமல் ராஜபக்ச மற்றும் 15 பேருக்கும் பயணத் தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.


திங்கட்கிழமை கோட்டகோகம மற்றும் மைனகோகம அமைதிப் போராட்டத் தளங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் காரணமாக அவர்கள் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


மேலும் படிக்க : Sri Lanka Crisis: மீண்டும் மீண்டும் இந்தியா நீட்டும் உதவிக்கரம், நெகிழும் இலங்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR