இலங்கையில் வலுக்கும் நெருக்கடி: ‘உள்ளாடை போராட்டத்தை’ துவக்கிய பொதுமக்கள்

இலங்கை அதிபர் நெருக்கடியை கையாண்ட விதத்தை எதிர்த்தும், இலங்கை அரசாங்கத்தை எதிர்த்தும் பொது மற்றும் தனியார் துறை ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 6, 2022, 05:26 PM IST
  • இலங்கை தற்போது கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது.
  • இலங்கையில் பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு கையிருப்பு 50 மில்லியன் டாலர்களுக்கு குறைவாகவே உள்ளது.
  • இலங்கை அரசாங்கத்தை எதிர்த்தும் பொது மற்றும் தனியார் துறை ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் வலுக்கும் நெருக்கடி: ‘உள்ளாடை போராட்டத்தை’ துவக்கிய பொதுமக்கள் title=

இலங்கை தற்போது கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. பல தசாப்தங்களில் இல்லாத அளவு இங்கு பணவீக்கமும் பற்றாக்குறையும் தீவிரமாக உள்ளன. தினமும் பல போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், இன்று ஆயிரக்கணக்கான கடைகள், பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள் மூடப்பட்டன. இலங்கை அதிபர் இந்த பிரச்சனையை கையாண்ட விதத்தை எதிர்த்தும், இலங்கை அரசாங்கத்தை எதிர்த்தும் பொது மற்றும் தனியார் துறை ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தொற்றுநோய், அதிகரித்து வரும் எண்ணெய் விலைகள் மற்றும் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தின் வரிக் குறைப்புகளின் விளைவாக இலங்கையில் பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு கையிருப்பு 50 மில்லியன் டாலர்களுக்கு குறைவாகவே உள்ளது.

1953 இல் தொடங்கிய பெரிய போராட்டத்துக்குப்பின், சுமார் 69 ஆண்டுகளுக்குப் பிறகு நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நாட்டின் மிகப்பெரிய போராட்ட பிரச்சாரம் மற்றும் வேலைநிறுத்தம் இதுவாகும்.

போராட்டத்தின் போது, நாடாளுமன்ற வளாகத்திற்கு எதிரே, ஆர்ப்பாட்டக்காரர்கள், இலங்கை போலிசார் அவர்களை முன்னோக்கி நகர்த்துவதைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட தடுப்புகளின் மீது உள்ளாடைகளை வீசியுள்ளனர். இது போராட்டங்களுக்கு ஒரு அசாதாரண திருப்பத்தை அளித்தது.

மஞ்சள் தடுப்புகள், மற்றும் இலங்கை அதிகாரிகளால் அமைக்கப்பட்ட ஜிஐ குழாய் சாலைத் தடைகள், உள்ளாடைகளால் மூடப்பட்டிருந்தன.

மேலும் படிக்க | பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை: உதவிக்கரம் நீட்டும் தமிழக அரசு

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி, காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். எனினும், மாணவர்கள் கலைந்துசெல்லவில்லை. 

அந்தாரே என அழைக்கப்படும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் தலைமையிலான இலங்கை மாணவர்கள், நாடாளுமன்றத்திற்கு செல்லும் பாதையில் 'ஹொருகோகம' என பெயரிடப்பட்ட எதிர்ப்பு முகாமை நிறுவினர்.

அதிபர் மஹிந்த ராஜபக்ச, பிரதமர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர்களது அரசாங்கத்திற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட சமீபத்திய எதிர்ப்பு முகாம் இதுவாகும்.

அதிபர், பிரதமர் மற்றும் அவர்களது அமைச்சரவை உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என்றும், ராஜபக்ச குடும்பத்தினர் பல ஆண்டுகளாக மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தை திரும்பத் தர வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோருகின்றனர்.

இலங்கை அரசாங்கம் பொருளாதாரத்தை தவறாக நிர்வகிப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதன் விளைவாக உணவு செலவுகள் அதிகரித்து, நாட்டின் இருப்புக்கள் வரலாற்றில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்தன.

மேலும் படிக்க | Srilankan Tamils vs Navy: இந்திய அகதிகளாக தமிழர்கள் செல்வதைத் தடுக்கும் இலங்கை கடற்படை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News