இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. டீசல், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை விண்ணை முட்டும் அளவுக்கு எகிறியதால் கிளர்ந்தெழுந்த மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினர். மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே சென்றது. கடந்த ஒருவார காலமாக போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியது. லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினர்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆயிரக்கணக்கானோர் கார்களிலும் பேருந்துகளிலும் தலைநகர் கொழும்பு நோக்கி சென்றனர். அலைஅலையாக மக்கள் கிளர்ந்தெழுவதை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் இலங்கை முழுவதும் போர்க்களமாக மாறியது. அரசு அலுவலங்கள், பேருந்துகள் மற்றும் அதிபர் கோத்தபயாவுக்கு சொந்தமான இடங்கள் என அனைத்து பகுதிகளும் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த கட்டடங்கள், பொருட்கள் என அனைத்தையும் அடித்து நொறுக்கினர். வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். நிலைமை கைமீறிச் சென்றதை அறிந்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, தனது பதவியை ராஜினாமா செய்தார். 



மேலும் படிக்க | அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள்; தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே


அதிபர் கோத்தபயா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யாவிட்டாலும், இலங்கையில் இருந்து சொகுசு கப்பல் ஒன்று மூலம் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலத்தீவுக்கு அவர் தப்பிச் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்கள் இலங்கையில் வெளியான நிலையில், போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் புகுந்தனர். அங்கிருத்த அனைத்து பொருட்களையும் சூறையாடிய அவர்கள், அதிபர் அறைக்குள் புகுந்து அங்கிருந்த தொலைக்காட்சியில் இலங்கை நிலவரத்தை தெரிந்து கொண்டனர். 



மேலும், அதிபரின் சொகுசு படுக்கையில் படுத்தும், அவர் பயன்படுத்திய விலை உயர்ந்த பொருட்களை உபயோகித்தும் மகிழ்ந்தனர். சிலர் நீச்சல் குளத்தில் குதித்து ஆனந்தமாக விளையாடினர். விடிய விடிய இலங்கை அதிபர் மாளிகைக்குள்ளேயே முகாமிட்டுள்ள போராட்டக்காரர்கள் அங்கேயே சமைத்து தடபுடலாக விருந்து சாப்பிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. கட்டுக்கடுங்காத போராட்டம் நடைபெறும் இலங்கையில் அடுத்த என்னவாகப்போகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 


மேலும் படிக்க | இலங்கையில் பெரும் பதற்றம்; ரணில் வீடும் முற்றுகை; இலங்கை அதிபர் துபாய் தப்பி சென்றாரா...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR