வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல திட்டமா? பாலியல் தொழிலுக்கு ஏலம் விடும் கொடுமை!
ஓமன் நாட்டிற்கு வேலைக்கு என்று அழைத்துச்சென்று பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி இலங்கை பெண்களை ஈடுபடுத்துவதாக புகார்கள் குவிந்துள்ளன.
இலங்கை நாட்டைச் சேர்ந்த பல்வேறு பெண்களை, ஓமன் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச்சென்று, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துவந்தன. தற்போதைய பொருளாதார சீரற்ற நிலைமையால், இந்த சம்பவங்கள் அதிகரித்து வந்தன. அந்த வகையில், இந்த சம்பவங்களுக்கு தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கு, விசாரணைக்கு உத்தரவிட்டு அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நாடாளுமன்றத்தில் தெரிவிக்கையில்,"வேலை வாங்கித் தருவதாக கூறி, பாதிக்கப்பட்டவர்கள் பலரையும் சுற்றுலா விசாவில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அழைத்துசென்றுள்ளனர். இந்த சம்பவத்தை முற்றிலும் ஒழிப்பதற்கும், இதன்பின்னால் இருக்கும் போலி முகவர்கள், குடிவரவு துறையில் இருக்கும் அரசு அதிகாரிகள், விமான நிலையத்தில் பணிப்புரியும் அதிகாரிகள் என பலரும் கைதுசெய்யப்படுவார்கள்" என்றார்.
இதுகுறித்து அமைச்சர் மேலும் கூறுகையில்,"இலங்கையை சேர்ந்த பெண்களை, துபாய் வழியாக ஓமன் அழைத்துச்சென்று, சிலர் அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் தந்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றனர்" என்றார்.
மேலும் படிக்க | கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திணறும் பாகிஸ்தான்! அதிகரிக்கும் நெருக்கடி!
இதுதொடர்பான புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலா விசா மூலம் ஓமனுக்கு வேலைக்கு செல்வதற்கு இலங்கை தடை விதித்துள்ளது. இதுகுறித்து அடுத்த அறிவிப்பு வரும்வரை இந்த தடை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஓமனில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊழியர்கள் சார்ந்த அதிகாரி ஒருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இலங்கை பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அந்த பெண் இலங்கையில் இருந்து பணிப்பெண் வேலைக்காக ஓமன் வந்துள்ளார்.
முன்னதாக, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை போலீசார் ஓமன் நாட்டிற்கு அனுப்பியுள்ளனர். அப்போதுதான், இந்த விவகாரத்தில் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் விவரிக்க இயலாத அளவிற்கான கொடுமைகளை அங்கு அனுபவித்து வருவதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை செய்தித்தொடர்பாளர் நிஹால் தல்துவா கூறுகையில்,"ஓமனில், இலங்கை பெண்களின் தோற்றத்தையும், வயதையும் பார்த்து அவர்களை ஏலம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றனர்" என்றார்.
ஓமனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பெண்கள் பலரும் தானாக முன்வந்து புகார் அளித்துள்ளனர் என்றும், அவர்கள் அனுபவித்த கொடுமைகள் குறித்து விவரிக்கின்றனர் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தாண்டு மட்டும், மொத்தம் 240 பாதிக்கப்பட்ட பெண்கள் இலங்கைக்கு திரும்பி வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், சர்வதேச குடிபெயர்வு அமைப்பிடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை தூதரகம் உதவிக்கோரப்பட்டுள்ளது.
இலங்கையின் அந்நிய வருமானத்தில் பெரும் வருவாயை ஈட்டுவது என்பது மத்திய கிழக்கு நாடுகளின் பணியாற்றும் பெண்களின் பங்களிப்புதான். ஏறத்தாழ அரேபிய நாடுகளில் 15 லட்சம் இலங்கை நாட்டினர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மற்றுமொரு கொடூரக் கொலை: இந்தியப் பெண்ணை கொன்று தலையை வெட்டிய பங்களாதேஷ் காதலன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ