தெற்காசியாவின் உயரமான இலங்கை லோட்டஸ் கோபுரம் மக்களுக்காக இன்று திறக்கப்பட்டது!
தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட தாமரை கோபுரம் இன்று முதல் மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படுகிறது.
தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட தாமரை கோபுரம் இன்று முதல் மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படுகிறது. தாமரை கோபுர நிர்மாணப் பணிகள் கொழும்பு மத்திய பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி ஆரம்பிக்கப்பட்டிருந்தன. சுமார் 7 வருடங்களில் இது தெற்காசியாவிலேயே பெரிய கோபுரமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று முதல் நாட்டு மக்கள் அனைவரும் தாமரை கோபுரத்தினை நேரில் சென்று பார்வையிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அதன்படி மக்கள் கோபுரத்தின் தரை தளத்தில் அனுமதிச் சீட்டினை பெற்று பார்வையிட முடியும். அதன்படி 10 வயதிற்கு குறைந்தவர்களுக்கு 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலும், ஏனையவர்களுக்கு 500 ரூபா முதல் 2000 ரூபா வரையிலும் அனுமதிச் சீட்டுக்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், இலங்கை தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான போலி அனுமதிச் சீட்டு, நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. சர்ச்சைக்குள்ளான குறித்த போலி அனுமதிச் சீட்டில், தமிழ் மொழி புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ள நிலை மற்றும் சீனப் பிரஜைகள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது ஆகியவை குறித்து சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
மேலும் படிக்க | ராமேஸ்வரத்தை சேர்ந்த ஆறு மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு!
மேலும் படிக்க | Emergency Aid: இலங்கைக்கு 25 மில்லியன் டாலர் அவசரகால கடனுதவி தரும் ஆஸ்திரேலியா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ