ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்

வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 12, 2022, 02:47 PM IST
  • ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை
  • நீதிபதி மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
  • விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஒரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள்.
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம் title=

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை இலங்கை கடற்படை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்து யாழ்பாணம் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், இந்த 12 மீனவர்களும் ஜாமீனில் செல்ல விரும்பினால் ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என அண்மையில் நீதிபதி கூறியது சர்ச்சையானது.                                         

எல்லைதாண்டி மீன் பிடித்ததாக, கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி இரவு நெடுந்தீவு கடற்பரப்பில் நான்கு இந்திய மீனவர்களும் கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் 12 இந்திய மீனவர்களும் என 16 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மேலும் படிக்க | என் இதயம் நொறுங்கிவிட்டது, தாய் நாட்டுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் : இலங்கை பாடகி 

இதில் இலங்கை கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, 12 ராமேஸ்வரம்  மீனவர்களையும் அவர்களின் படகு ஒன்றினையும் கைது செய்த இலங்கை கடற்படையினர் கிளிநொச்சி மாவட்ட மீன் வளத்துறையிடம்  ஒப்படைத்தயடுத்து 12 ராமேஸ்வரம் மீனவர்களும் கடந்த மார்ச் 24ம் தேதி மாலை  கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர் ஏப்ரல் 07 ந்தேதி மீனவர்களை வரை சிறையில் வைக்க உத்தரவிட்டிருந்தனர்.       

இதனைத்தொடர்ந்து, ஏப் 7 ந்தேதி  மேற்படி 12 ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்பிலான வழக்கு  கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதவான் பி.ஆர் ஸ்மாத் ஜெமில் முன்னிலையில்   எடுத்துக் கொள்ளப் பட்டது. மேலும், இந்த மீனவர்களுக்கு எதிரான  குற்றச்சாட்டு பத்திரங்கள்  தாக்கல் செய்யப்பட்டதையடுத்து 12 மீனவர்களையும் தலா இரண்டு கோடி ரூபா பெறுமதியான பிணையில் செல்லுமாறு உத்தரவிட்டு, எதிர்வரும்  மே மாதம் 12 ஆம் தேதியான இன்று வரை சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், மீனவர்களின் வழக்கு இன்று மூன்றாவது முறையாக கிளிநொச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஒரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் கைது 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News