அமேசான் தளத்தில் விற்கப்படும் இலங்கை கொடி டிஸைனில் உள்ள மிதியடி, பிக்கினி ஆடைகளை உடனே அகற்ற வேண்டும் என இலங்கை அமேசான் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக சீனாவில் தயாரிக்கப்பட்ட இலங்கை கொடி வடிவமைப்பில் ஆன மிதியடி தொடர்பாக கொழும்பு கடும் கண்டனம் தெரிவித்தது, இலங்கையில் உள்ள சீன தூதரகத்தில் இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளது இலங்கை. 


இலங்கை தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ள போதிலும், இந்த பொருட்கள் தொடர்ந்து விற்கப்படுகின்றன. 
இதை அடுத்து, இலங்கை அமேசான் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 


இது குறித்து சமூக வலைதளத்தில் இலங்கை நாட்டவர் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். அமேசான் (Amazon) இலங்கையில் தடை செய்யப்பட வேண்டும் என கூறி வருகின்றனர். 


ALSO READ | கடல் பரப்பில் 'வானத்தில் மிதக்கும்' கப்பல்.. வைரலாகும் புகைப்படம்..!!

சீனா இலங்கைக்கு கடன் வழங்கி ஆதிக்க செலுத்த நினைக்கிறது என்ற கருத்து பரவலாக உள்ள நிலையில், சீனாவில் கடன் வாங்கினால், இப்படித் தான் அவமானப்பட வேண்டியிருக்கும் எனவும், வருங்காலத்தில் கழிப்பறை பேர் நாப்கின்களிலும் கூட இலங்கை தேசிய கொடி அச்சடிக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.



சீன (China) நிறுவனமான "ஷெங்ஹாங் லின்" தயாரித்த கொடி வடிவமைப்பிலான மிதியடி அமேசானில் $ 12 க்கு விற்கப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டது. பாலியெஸ்டரில் தயாரிக்கப்பட்ட இலங்கை கொடி வடிவமைப்பில் ஆம மிதியடி  $ 12 மற்றும் $9.20 லெலிவரிக்கான கட்டணத்தில் கிடைக்கும் என விளம்பரம் செய்யப்பட்டது.


ALSO READ |  சீனாவில் இலங்கை தேசிய கொடி வடிவமைப்பில் மிதியடி; கடுப்பில் உள்ள இலங்கை


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR