சமூக ஊடகங்களில் பிரபலமானவர்களுக்கு பணமும் கூரையை பொத்துக் கொண்டு கொட்டுகிறது. ஆனால், அவர்கள் தங்கள் பிரபலத்திற்கு கொடுக்கும் விலையும் அதிகமாக இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கான அண்மை உதாரணம் அமெரிக்காவை சேர்ந்த டீனேஜ் சிறுமி அவா மஜூரி, இந்த டிக்டாக் நட்சத்திரத்தின் வெறித்தனமான ரசிகர் ஒருவர் அவாவின் வீட்டிற்கு வந்தபோது ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தது உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.


அவா மசூரியின் வீட்டிற்கு வந்த எரிக் ரோஹன் ஜஸ்டின் என்ற 18 வயது இளைஞரை அவாவின் தந்தை திருப்பி அனுப்பிவிட்டார். ஆனால், அதை ஏற்றுக் கொள்ள முடியாத வெறித்தனமான ரசிகர் எரிக் ரோஹன் ஜஸ்டின் மீண்டும் அவா மசூரியின் வீட்டிற்கு வந்தார்.  


மேலும் படிக்க | 'டிக்டாக்' புகழ் இலக்கியா நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


அவாவின் தந்தை ராப் மஜூரி, , ஓய்வுபெற்ற போலீஸ்காரர். தன்னால் திருப்பி அனுப்பப்பட்ட இளைஞர் திரும்பி வந்தபோது, அவர் கையில் துப்பாக்கி இருந்ததை கண்டு திடுக்கிட்டார். 


கையில் இருந்த துப்பாக்கியை கீழே போடச் சொல்லி வற்புறுத்திய முன்னாள் போலீஸ்காரரின் வார்த்தைகளை காதில் போட்டுக்கொள்ளாமல் டிக்டாக் பிரபலத்தைப் பார்க்க வீட்டிற்குள் நுழைய முற்பட்டதால், வேறு வழியில்லாமல் தனது துப்பாக்கியால் சுட்டதாக அவாவின் தந்தை சொல்கிறார்.


இந்த விவகாரம் உலக அளவில் பெரிய அளவில் விவாதங்களை எழுப்பியிருக்கிறது.



2020 ஆம் ஆண்டு முதல் டிக்டாக்கை பயன்படுத்திவரும் அவாவுக்கு சமூக ஊடகங்களில் 1 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். உருவாக்கியுள்ளார்.


தனது 13 வயதில் சமூக ஊடகத்தில் செயல்படத் தொடங்கிய டிக்டாக் பிரபலம் (TikTok Fame) அவா மசூர், விரைவாக பிரபலமடைந்தார். மூன்று கணக்குகள் மூலம் கலக்கி வரும் அவா டீனேஜில் சம்பாதிக்கும் தொகை கோடிக்கணக்கில் என்றால் மலைப்பாக இருக்கிறது.


மேலும் படிக்க | வாட்ஸ்அப்பில் Font டிசைன்களை மாற்றுவது எப்படி?


ஆனால், சமூக ஊடக பிரபலத்திற்கு, அந்த பிரபலத்தன்மையே ஆபத்தையும் ஏற்படுத்துகிறது என்பதை ரசிகரின் உயிரிழப்பு உணர்த்துகிறது. அவாவின் ரசிகர் எரிக் ரோஹன் ஜஸ்டினின் மொபைலில் அவாவின் ஆயிரக்கணக்கான படங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.


ஆனால், துப்பாக்கியால் ரசிகரை சுட்டுக் கொன்ற அவாவின் தந்தைக்குக் எதிராக அவர்கள் வசிக்கும் புளோரிடாவின் 'ஸ்டாண்ட் யுவர் கிரவுண்ட்' சட்டங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காது. 


காரணம், தங்கள் உயிருக்கு தெளிவான அச்சுறுத்தல் இருந்தால், ஊடுருவும் நபர்களுக்கு எதிராக பலப்பிரயோகத்தையும், ஆயுதங்கலையும் பயன்படுத்த வீட்டு உரிமையாளர்களை அனுமதிக்கும் சட்டம் அங்கு அமலில் இருக்கிறது.


எனவே, டிக்டாக் பிரபலம் அவா மசூரின் தந்தைக்கு எதிராக எந்தவித சட்டபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படாது.


மேலும் படிக்க | கார் ஓட்டிக்கொண்டே டிக்டாக் செய்தபடி மண்டபத்துக்கு செல்லும் மணப்பெண்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR