லண்டன்: முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் சிலைகள் அகற்றப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. உண்மையில், அடிமைத்தனத்தையும் காலனித்துவத்தில் ஈடுபாட்டையும் மதிப்பாய்வு செய்யும் வெல்ஷ் அரசாங்க அறிக்கையில் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் மகாத்மா காந்தி (Mahatma Gandhi) இருவரும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பிடத்தக்க வகையில், இந்த அறிக்கையில், பல பிரபலங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது தவிர, அவர்கள் அனைவரின் தவறுகளையும் மதிப்பீடு செய்ய வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பிளாக் லைவ்ஸ் மேட்டரின் போராட்டத்தின் போது இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. இதில், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோர் சர்சைக்குரிய நபர்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பிளாக் லைவ்ஸ் மேட்டரின்  (Black Lives Matter) போராட்டத்தின் போது இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. இதில், இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோர் சர்ச்சைக்குரிய நபர்கள் பட்டியலில் உள்ளனர்


1896 ஆம் ஆண்டு காந்தி வழங்கிய உரையில், வெள்ளையர்கள், இந்துக்களையும் முஸ்லிம்களையும் சரியாக நடத்தவில்லை என்று கூறியதாகவும், உண்மையில் அவர் கருப்பின ஆப்பிரிக்கர்களை பற்றி  அதிகம் கவலைப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.


ALSO READ | ஸ்வீடனில் இரவில் ஊதா நிறமாகும் வானம்.. காரணம் என்ன..!!


வின்ஸ்டன் சர்ச்சிலின் பெயரிடப்பட்ட 2 கட்டிடங்கள் மற்றும் 15 தெருக்கள் உள்ளன என அறிக்கை ஒன்று கூறுகிறது. இதை தென் வேல்ஸில் வாழும் சமூகத்தினர் பெரும்பாலும் விரும்பவில்லை என கூறப்படுகிறது..


முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் 'பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை அகற்றுவதை எதிர்த்தார்', 'ஆங்கிலோ-சாக்சன் (Anglo-Saxon) இனத்தின் மேன்மை மீது நம்பிக்கை வைத்தார்', 'இந்தியாவின் வங்காளத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கு போதுமான நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார், என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இந்த அறிக்கையில், இந்தியாவின் (India) சுதந்திரத்தில் முக்கிய பங்கு வகித்த மகாத்மா காந்திஜி பெயரும் இடம் பெற்றுள்ளது. அவரது சிலை வெல்ஷ் தலைநகரில் அமைந்துள்ளது. 'கறுப்பின தென்னாப்பிரிக்கர்களுக்கு எதிரான இனவாதம்' தொடர்பாக மகாத்மா காந்தியின் பெயர் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.


மக்களின் கருத்துக்களை மதித்து, சர்ச்சைக்குரிய சில நினைவுச் சின்னங்களை அருங்காட்சியகத்திற்கு மாற்றலாம் என்றும், அதனை உடைக்க வேண்டியதில்லை என்றும் தணிக்கை பணிக்கு தலைமை தாங்கிய கியோர் லெகல் கூறினார். 


மேலும் படிக்க | சீன அதிபர் ஜி ஜின்பிங் படையினரிடம் சிறப்புரை... சீனா போருக்கு தயாராகிறதா...!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR