சீனாவின் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் நடந்து செல்வதைப் பார்க்கும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது. இப்படிப்பட்ட பல அதிர்ச்சி வீடியோக்கள் இணையங்களில் வைரலாகின்றன. அப்படி என்ன வித்தியாசம்? சீனாவில், மாணவர்கள் நடப்பதற்கு பதிலாக தரையில் தவழ்ந்து செல்வது பார்ப்பதற்கு விநோதமாக இருக்கிறது. சீனாவில் இருந்து அடிக்கடி விசித்திரமான விஷயங்கள் அல்லது சம்பவங்களைக் கேட்கிறோம். சில நேரங்களில் அவை பயமுறுத்தும் என்றால், சில சமயங்களில் அவை தனித்துவமானவைகளாக இருக்கின்றன.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவில் இருந்து நாம் கேட்கும் விசித்திரமான சம்பவங்களில் லேட்டஸ்டாக, மாணவர்கள் தரையில் ஊர்ந்து செல்வது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுக்கிறது. இருப்பினும், இது ஒரு புதிய போக்கின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. நான்கு கால்களிலும் ஊர்ந்து செல்வது ஒரு தனித்துவமான பயிற்சியாகும், இது மனித பரிணாமக் கோட்பாட்டை மறுபரிசீலனை செய்ய மக்களைத் தூண்டுகிறது.


மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த இந்த ‘விஷயங்களை’ தவிர்த்தாலே போதும்


சவுத் சைனா மார்னிங் போஸ்ட் (SCMP) இன் அறிக்கையின்படி, பெய்ஜிங் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த வாரம் ஒரு விளையாட்டு மைதானத்தில் ஊர்ந்து சென்ற வீடியோ வெளியான பிறகு, நாடு முழுவதும் இந்த புதிய போக்கு தொடங்கியிருப்பது பரவலாக தெரியத் தொடங்கியுள்ளது.


பழைய காலத்தை மீண்டும் மீண்டும் செய்யும் போக்கு


சமூக ஊடகங்கள் மூலம் வைரலான இந்த தவழ்ந்து செல்லும் பழக்கம், மாணவர்கள் தங்கள் அனைத்து உறுப்புகளையும் பயன்படுத்தி ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதைக் காட்டுகிறது, இது நாற்கர இயக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இதில், மாணவர்கள் விலங்குகள் போல் நடந்து செல்கின்றனர்.


செய்திகளின்படி, இந்த செயல்பாட்டில் மக்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது, ஏனெனில் இது ஒரு பழமையான பயன்முறையை மீண்டும் செய்வதாலும், வித்தியாசனமானதாகவும் இருக்கிறது. உடலின் அனைத்து உறுப்புகளும் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இது உடல் எடையை குறைக்க பயன்படுமா என்ற கேள்விகளும் எழுகிறது. ஆனால், இது சுவாரஸ்யமாக மட்டுமல்ல, ஆரோக்கியமாகவும் இருக்கிறது.


மேலும் படிக்க | குளிர் காலத்தில் உடல் எடையை குறைக்க இந்த ஸ்னாக்ஸ் உதவும் 


SCMP செய்திகளின் படி, இன்ஸ்டாகிராம் போன்ற தளமான Xiaohongshu இல் Crawling Competition என்ற ஹேஷ்டேக் 3.8 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.


கோவிட் லாக்டவுனின் போது தனிமையை வெல்ல, அட்டை மறுசுழற்சி செய்யப்பட்ட கைவினைப் பொருட்களில் இருந்து விலங்குகளின் தோழர்களை உருவாக்கும் மாணவர்களின் ஆர்வத்தை இப்போது கல்லூரி வளாகங்களில் காணலாம்.


நாட்டில் அதிகரித்து வரும் கோவிட்-19 வழக்குகளின் மத்தியில், மாணவர்கள் ஆரோக்கியமாகவும் இயல்பாகவும் இருக்க இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகள் உதவுகின்றன. ஒரு பயனர் தனது பதிவில், 'தவழ்ந்து செல்லும் எனது முயற்சிக்கு இணைய நண்பர்களாலும் ஊக்கப்படுதுகின்றனர். நான் இன்று ஏழு நிமிடங்கள் வலம் வந்தேன். நான் இப்படி நான்கு கால்களில் நடப்பதைப் பார்த்து, என் செல்லப் பூனை பயந்து போயிருக்கும்’ என்று எழுதியுள்ளார்.


மற்றொரு மாணவர் தனது பதிவில், 'கிராலிங் எனக்கு சுயநிறைவு, குறும்புத்தனம், வித்தியாமான செயலை செய்த திருப்தியைக் கொடுத்தது' என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க | Garlic Side Effects: அளவிற்கு மிஞ்சிய பூண்டு கல்லீரலை பாதிக்கும்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ