ஆப்கானிஸ்தான் செய்திகள்: ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து செய்திகள் வெளியாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ரஷ்ய தூதரக வாயிலில் இன்று (திங்கள்கிழமை) தற்கொலை படை தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது, ​​தூதரக ஊழியர்கள் 2 பேர் உட்பட 20 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது தூதரகம் முன்பு விசாவிற்காக மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்:


காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் நுழைவாயில் அருகே தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் இரண்டு ரஷ்ய தூதரக ஊழியர்கள் கொல்லப்பட்டனர், மேலும் 11 பேர் காயமடைந்தனர் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் அரசு நடத்தும் செய்தி நிறுவனமான ஆர்ஐஏ நோவோஸ்டியின் கூற்றுப்படி, விசாவுக்காக தூதரகத்திற்கு வெளியே பலர் வரிசையில் நின்றுள்ளனர். ஒரு ரஷ்ய போலிஸாரின் கூற்றுப்படி, வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர் தற்கொலை படையை சேர்ந்தவராக இருக்கலாம். குண்டுகளை வீசிய பிறகு அவர் தூதரகத்தின் உள்ளே செல்ல முயற்சித்த போது, ஆயுதமேந்திய காவலர்கள் அவரை சுட்டுக் கொன்றனர் எனக்கூறியுள்ளது. ரஷ்ய தூதரகத்திற்கு வெளியே நின்றிருந்த தலிபான் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியவரை அடையாளம் கண்டுள்ளனர். பின்னர் அவரை சுட்டனர்.


அடையலாம் தெரியாத தீவிரவாதி:


காபூல் நேரப்படி காலை 10:50 மணியளவில் தூதரகத்தின் தூதரகப் பகுதியின் நுழைவாயிலுக்கு அருகில் அடையலாம் தெரியாத தீவிரவாதி வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க: டி20 போட்டி நடைபெற்ற மைதானத்தில் திடீர் குண்டு வெடிப்பு! மக்கள் அதிர்ச்சி!


ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள்:


தலிபான்கள் காபூலில் ஒரு வருடத்திற்கு முன்னர் நாட்டைக் கைப்பற்றிய பின்னர் அங்கு தூதரகத்தை பராமரிக்கும் சில நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. மாஸ்கோ அதிகாரப்பூர்வமாக தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்கவில்லை என்றாலும், பெட்ரோல் மற்றும் பிற பொருட்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் தொடர்பாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


ஆகஸ்ட் 2ம் தேதியும் குண்டுவெடிப்பு நடந்தது:


முன்னதாக ஆகஸ்ட் 2 ஆம் தேதி, ஹெராத் மாகாணத்தில் நெரிசலான குஜர்கா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் பிரபல மதகுரு முஜீப் உல்-ரஹ்மான் அன்சாரி மற்றும் அவரது பாதுகாவலர்கள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 23 பேர் படுகாயமடைந்ததாக ஹெராத் போலீஸ் செய்தி தொடர்பாளர் மெஹ்மூத் ரசோலி தெரிவித்தார். இங்கு முஸ்லிம்களின் மத வார விழா கொண்டாடப்பட்ட வேளையில் மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.


மேலும் படிக்க: Baba Vanga Predictions: உலகம் எப்போது அழியும்... பாபா வாங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ