சிரியாவில் அதிபராக உள்ள பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 7 ஆண்டாகளாக உள்நாட்டுப்போர் நீடித்து வருகிறது. இதில் இதுவரை குறைந்தது 3¼ லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 76 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. மேலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் எதிராக அமெரிக்கா படைகள் முகாமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன.


இந்த நிலையில், அதிபர் ப‌ஷல் அல் -ஆசாத் ஆதரவு ராணுவ போர் விமானங்கள் ரக்கா மீது குண்டு வீசி தாக்கின. அப்பொழுது அமெரிக்காவுக்கு ஆதரவு அளிக்கும் படைகள் மீதும் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. 


இதனால் அமெரிக்க ராணுவம் சிரிய அரசு ஆதரவு போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. இதற்கு சிரியா கண்டனம் தெரிவித்தது. ஆனால் தங்களை காப்பாற்றி கொள்ளவே விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.


இந்த மாதத்தில் மட்டும் நான்காவது முறையாக சிரிய ஆதரவு படையை அமெரிக்க ராணுவம் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.