ஆப்கானிஸ்தானில் வரலாறு காணாத மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. தாலிபான் ஒவ்வொரு நகரமாக ஆப்கானிஸ்தான் முழுவதையும் தன் வசப்படுத்தியதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தாலிபான்கள் (Taliban)  நாடு தழுவிய இராணுவ வெற்றியை உறுதிப்படுத்திய பின்னர் அதிபர் கானியுடன் நாட்டின் பல முக்கிய தலைவர்களும் நாட்டை விட்டு சென்றனர். இதைத் தொடர்ந்து தாலிபான் கிளர்ச்சிக் குழுவின் இணை நிறுவனர் முல்லா அப்துல் கானி பராதர் ஆப்கானிஸ்தனின் புதிய அதிபராகக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் அதிபர் மாளிகையின் கட்டுப்பாட்டை தாலிபான் கைப்பற்றிய பிறகு, ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி (Ashraf Ghani) நாட்டை விட்டு வெளியேறினார். இதைத் தொடர்ந்து தாலிபான்கள், ஆப்கானிஸ்தான் அரசு ஞாயிற்றுக்கிழமை சரிந்தது.


"தாலிபான்கள் தங்கள் வாள் மற்றும் துப்பாக்கி பலத்தால் வெற்றி பெற்றுள்ளனர். இப்போது தங்கள் நாட்டு மக்களின் மரியாதை, சொத்து மற்றும் சுய பாதுகாப்புக்கு அவர்கள் பொறுப்பாக உள்ளனர்" என்று நாட்டை விட்டு தப்பி ஓடிய பிறகு, பேஸ்புக் மூலம் கானி அளித்த முதல் அறிக்கையில் தெரிவித்தார்.


ALSO READ: ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி; ஆப்கான் பெண்களுக்கு நரக வாழ்க்கை ஆரம்பம்..!


ஆப்கானிஸ்தானின் அனைத்து நகரங்களும் 10 நாட்களுக்குள் வீழ்த்தப்பட்டு விட்டன என்றும் இது தாங்கள் எதிர்பார்த்ததை விட விரைவாக நடந்தது என்றும், தாலிபான் படைகளுக்கு இணையாக உலகில் வேறு எந்த படையும் இல்லை என்றும் பராதர் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.


ஒரு வீடியோ செய்தியில், ”மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து, அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து, அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். தாலிபானின் உண்மையான சோதனை இனிதான் துவங்கும்” என்று அவர் கூறியதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.


அப்துல் கனி பராதர் யார்?


தலிபான்களின் அரசியல் தலைவரான அப்துல் கானி பராதர் 2010 இல் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். மூன்று வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் அவர் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் மற்றும் கத்தார் நாட்டிற்கு மாற்றப்பட்டார்.


தாலிபான் (Taliban) இயக்கத்தின் பிறப்பிடமான கந்தஹாரில் வளர்க்கப்பட்ட பராதர், 1980 களில் சோவியத்-ஆப்கானிஸ்தான் போரில் கந்தஹாரில் போராடி, சோவியத் ஆதரவு பெற்ற ஆப்கான் அரசுக்கு எதிராக ஆப்கான் முஜாஹிதீனில் பணியாற்றினார்.


1994 இல், அவர் தனது முன்னாள் தளபதி முகமது ஓமருக்கு தெற்கு ஆப்கானிஸ்தானில் தாலிபான் படைகளுக்கு ஆள் சேர்க்க உதவினார்.


ALSO READ:தாலிபான் வசமானதா ஆப்கானிஸ்தான்; ஆப்கான் அரசு கூறுவது என்ன..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR