UNSCவில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து எப்போது? எலோன் மஸ்க் கேள்வி
Elon Musk On UNSC Membership Of India: உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இல்லை என்பது அபத்தமானது என டெஸ்லா சி.இ.ஓ எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்
Elon Musk UNSC: ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்று டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் தெரிவித்டுள்ளார். சில நாடுகளிடமே அதிக அதிகாரம் இருப்பதாகவும், அவை அவற்றை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா என்னும் நிலையில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இல்லை என்பது அபத்தமானது என்று மஸ்க் கூறியுள்ளார்.
எலோன் மஸ்க் கருத்து
டெஸ்லா (TESLA) தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், ஐநா தலைவர் அன்டோனியோ குட்டெரஸின் ட்வீட்டைப் பகிர்ந்துகொண்டு தனது கருத்தை வெளிப்படுத்தினார். உண்மையில், குடெரெஸ் தனது ட்வீட்டில் ஆப்பிரிக்காவை வழிநடத்த UNSCயில் யாரும் இல்லை என்று எழுதியிருந்தார்.
உலக அமைப்புகள் காலத்துக்கு ஏற்ப மாற வேண்டும். 80 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்ததோ அதே உலகத்தைத்தான் அவர்கள் இயக்குகிறார்கள் என்ற குடெரஸ் பதிவிட்ட எக்ஸ் பதிவுக்கு எலோன் மஸ்க் பதிலளித்தார்.
எலோன் மஸ்க் "ஒரு கட்டத்தில், ஐ.நா அமைப்புகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும்... பூமியில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும், பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் இல்லை என்பது அபத்தமானது. ஆப்பிரிக்காவும் கூட்டாக இருக்க வேண்டும். நிரந்தர இருக்கை கொடுப்பது அவசியம்." என்று பதிவிட்டு, குறிப்பிட்டகாலத்திற்குப் பிறகு ஐ.நா.வின் கொள்கைகளை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்றும் மஸ்க் கோரிக்கை விடுத்தார்.
இந்தியா ஏன் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக முடியவில்லை?
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா என 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்த 5 நாடுகள் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. எந்தவொரு நாடும் UNSC இன் நிரந்தர உறுப்பினர் ஆக விரும்பினால், ஐந்து நாடுகளும் சேர்ந்து தீர்மானத்தை நிறைவேற்றுவது அவசியம். ஐந்தில் நான்கு நாடுகள் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்குவதற்கு ஆதரவாக உள்ளன, அதே சமயம் சீனா மட்டும் இந்தியாவை UNSCயில் நிரந்தர உறுப்பினராக்க விரும்பவில்லை.
UNSC அமைப்பின் வலிமை
UNSC என்பது ஐக்கிய நாடுகள் சபையின் (UN) மிகவும் சக்திவாய்ந்த அமைப்பாகும். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு UNSCக்கு உள்ளது. உலகின் முக்கிய பிரச்சினைகளுக்கு UNSC யிடமிருந்து ஒப்புதல் பெறுவதும் அவசியம். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரிக்க அல்லது எங்கும் தடைகளை விதிக்க UNSCக்கு அதிகாரம் உள்ளது. இது உலகின் மிகவும் சக்திவாய்ந்த நிறுவனங்களில் ஒன்றாகும்.
மேலும் படிக்க | Udyogini: பெண்களுக்கான சிறப்பு திட்டம்! வட்டியில்லாத கடனை பெற முடியும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ