ஐடிபிஐ, பேங்க் ஆஃப் பரோடா, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பிஎன்பி போன்ற வங்கிகள் எம்சிஎல்ஆர் விகிதங்களை மாற்றியுள்ளன. இந்த 7 வங்கிகளின் எம்சிஎல்ஆர் விகித மாற்றங்களால், கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்துள்ளது. MCLR (Marginal Cost Best Lending Rate) விகித மாற்றங்களால், தனிநபர் கடன்களுக்கான (Personal Loan) வட்டி விகிதங்களும் மாறுகின்றன. எந்த வங்கி எவ்வளவு மாற்றம் செய்துள்ளது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கியின் (ICICI Bank) இணையதளத்தின்படி, ICICI வங்கி எம்சிஎல்ஆரை 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. முந்தைய 8.5 சதவீதமாக இருந்த கட்டணங்கள் 8.6 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளன. அதேசமயம் 3 மாத கட்டணம் 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 6 மாத கட்டணங்கள் 8.9 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 1 ஆண்டு விகிதங்கள் 9 சதவீதத்தில் இருந்து 9.1 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கி
PNB இன் வலைத்தளத்தின்படி, பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank) MCLR விகிதங்களை 5 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. கட்டணங்கள் 8.2ல் இருந்து 8.25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 3 மாத கட்டணம் 8.35 சதவீதத்தில் இருந்து 8.40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 6 மாத கட்டணங்கள் 8.55 சதவீதத்தில் இருந்து 8.60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓர் ஆண்டுக்கான வட்டி விகிதங்கள், 8.65 சதவீதத்திலிருந்து 8.70 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாங்க் ஆஃப் இந்தியா
எம்சிஎல்ஆர் விகிதங்களை பாங்க் ஆஃப் இந்தியா (Bank of India) தற்போது 5 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. முன்னதாக 7.95 சதவீதமாக இருந்த கட்டணம் 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. எம்சிஎல்ஆர் அடிப்படையிலான விகிதங்கள் 1 மாதத்திற்கு 8.25 சதவீதமாக உள்ளது. அதேசமயம் 3 மாதங்களுக்கான விகிதம் 8.40 சதவீதம். 6 மாதங்களுக்கான விகிதங்கள் 8.60 சதவீதம் மற்றும் 1 ஆண்டுக்கான விகிதங்கள் 8.8 சதவீதம்.
மேலும் படிக்க | Aadhaar Update: ஆதார் சம்பந்தமான விதிகளில் புதிய மாற்றங்கள்!
பாங்க் ஆஃப் பரோடா
பாங்க் ஆப் பரோடாவும் (Bank of Baroda) அதன் எம்சிஎல்ஆர் விகிதங்களை உயர்த்தியுள்ளது. எம்சிஎல்ஆர் விகிதம் 8 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு மாத எம்சிஎல்ஆர் விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, அது 8.30 சதவீதமாகவே உள்ளது. 3 மாத எம்சிஎல்ஆர் விகிதமும் மாறாமல் 8.4 சதவீதமாக உள்ளது. அதேசமயம் 6 மாத காலத்திற்கு எம்சிஎல்ஆர் விகிதம் 5 அடிப்படை புள்ளிகளால் அதிகரிக்கப்பட்டு 8.55 சதவீதத்தில் இருந்து 8.60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. எம்சிஎல்ஆர் விகிதங்கள் 1 வருட காலத்திற்கு 8.75 சதவீதத்தில் இருந்து 8.80 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கனரா வங்கி
கனரா வங்கியும் (Canara Bank) எம்சிஎல்ஆர் விகிதத்தை 5 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. தற்போது 8 சதவீதத்தில் இருந்து 8.05 சதவீதமாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு மாத காலத்திற்கு எம்சிஎல்ஆர் விகிதம் 8.10 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம், 3 மாதங்களுக்கு முன்பு 8.20 சதவீதமாக இருந்த விகிதம் 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விகிதம் 6 மாத காலத்திற்கு 8.55 சதவீதத்தில் இருந்து 8.60 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஓராண்டுக்கான கட்டணம் 8.75 சதவீதத்தில் இருந்து 8.80 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கனரா வங்கி எம்சிஎல்ஆரை இரண்டு ஆண்டுகளுக்கு 9.10 சதவீதமாகவும், மூன்றாண்டுகளுக்கு 9.20 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளது.
HDFC வங்கி
HDFC வங்கி MCLR ஐ 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. 8.70 சதவீதத்தில் இருந்து 8.80 சதவீதமாக உயர்த்தியுள்ளது. எம்சிஎல்ஆர் விகிதங்கள் ஒரு மாதத்திற்கு 5 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 8.80 சதவீதமாக உள்ளது. 3 மாதங்களுக்கு விகிதங்கள் 9 சதவீதமாகிவிட்டது. 6 மாதங்களுக்கு எம்சிஎல்ஆர் விகிதம் 9.20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. எம்சிஎல்ஆர் ஓராண்டுக்கு 9.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விகிதம் 3 ஆண்டுகளுக்கு 9.30 சதவீதமாக உள்ளது.
ஐடிபிஐ வங்கி
ஐடிபிஐ வங்கியின் இணையதளத்தின்படி, வங்கி எம்சிஎல்ஆரை 8.30 சதவீதமாக மாற்றியுள்ளது. ஒரு மாத காலத்திற்கான எம்சிஎல்ஆர் 8.45 சதவீதமாக உள்ளது. இந்த விகிதம் 3 மாதங்களுக்கு 8.75 சதவீதம். 6 மாதங்களுக்கு எம்சிஎல்ஆர் 8.95 சதவீதம். MCLR 1 வருடத்திற்கு 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு எம்சிஎல்ஆர் விகிதம் 9.55 சதவீதமாக உள்ளது. இது மட்டுமின்றி 3 ஆண்டுகளுக்கு எம்சிஎல்ஆர் 9.95 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Budget 2024: அதிகரித்த நிதியுதவி, நவீனமயமாக்கல்... காத்திருக்கும் கல்வித்துறை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ