கலிபோர்னியாவில் உள்ள பெர்ரீஸ் நகரை சேர்ந்தவர்கள் டேவிட் ஆலென் டர்பின் (வயது 57) மற்றும் லூயிஸ் அன்னா டர்பின் (வயது 49). அவர்களுக்கு பதிமூன்று குழந்தைகள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த பதிமூன்று குழந்தைகளையும் வெளியுலகம் தெரியாமல் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்து வளர்த்துள்ளனர். இதையடுத்து, அங்கிருந்து தப்பிய அவர்களது 17 வயது மகள் தொலைபேசியில் போலீசாரை தொடர்பு கொண்டுள்ளார்.


இதையடுத்து அந்த வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டில் 2 முதல் 29 வயது நிறைந்த 13 பேர் இருந்ததை கண்டறிந்தனர்.  அவர்களில் சிலர் படுக்கையில் சங்கிலியால் கட்டி இருளில் அடைக்கபட்டிருன்தனர். அவர்களுக்கு சரியான உணவுதராமல், அழுக்கடைந்த நிலையில் துர்நாற்றத்துடன் கட்டிவைத்திருன்தனர்.


இதையடுத்து, அவர்களை அங்கிருந்து மீட்டு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர் பின்னர் அவர்களுக்கு உணவு வழங்கபட்டது.


பின்னர் அந்த பெறோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.  அவர்களுக்கு அபராதம் சுமார் 90 லட்சம் அமெரிக்க டாலர் தொகை செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.