பல விதமான நன்மைகளை வெளியுலகிற்கு எடுத்துக்கூற நாடகங்கள்,பாடல்கள்,சுவரொட்டிகள் போன்றவை மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்துவது வழக்கம். இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் நிகழ்ச்சி நடத்தப்பட்டதற்கான நோக்கம் மக்களை எளிதாக சென்று சேரும். அதிலும் குறிப்பாக கிராபிக்ஸ் மூலம் முற்றிலும் அழிந்து விட்ட, அதாவது நம் தாத்தாவோட..தாத்தாவோட...தாத்தாவோட காலத்திலேயே அழிந்து போன உயிரினங்களை வைத்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டால் எப்படி இருக்கும்.  ஐ.நா.வின் வளர்ச்சித் திட்ட முகமையானது பல ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் அழிந்துவிட்ட டைனோசரை வைத்து ஒரு கிராபிக்ஸ் வீடியோவை உருவாக்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோ வெளியிடப்பட்டதன் நோக்கமானது கால நிலை மாற்றம் சம்மந்தப்பட்ட விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்துவதற்கு தான்.  இதில் ஐ.நா.சபையில் உலகத் தலைவர்கள் முன்பு ஒரு டைனோசர் வந்து பேசுவது போல வீடியோ சித்தரிக்கப்பட்டுள்ளது.   அதாவது அந்த வீடியோவில் ஒரு டைனோசர் வந்து "மனிதர்களே உங்களது அழிவைத் நீங்களே தேடிக் கொள்ளாதீர்கள்,அதைனை தவறிகூட ஒருபோதும் தேர்வு செய்து விடாதீர்கள். உங்களை நீங்கள் தான் காப்பாற்றி கொள்ள வேண்டும்.  நேரம் தாழ்ந்து விடவில்லை, இன்னும் கூட காலம் இருக்கிறது,.மேலும் சிறிது மாற்றங்களை செய்து கொண்டு உங்களது இனத்தை நீங்கள் காத்துக் கொள்ளுங்கள்" என்று அந்த டைனோசர் கூறுகிறது. 



இந்த வீடியோவை ஆங்கில மொழியில் மட்டுமல்லாது உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்த்து ஐ.நா. வெளியிட்டுள்ளது.  இந்த டைனோசருக்கு பிளாக் என்பவர் பின்னணியில் குரல் கொடுத்துள்ளார்.  மேலும் புகழ் பெற்ற நடிகர்களான ஈஸா கோன்சாலஸ், நிக்கோலஜ் காஸ்டர் வால்டா, ஐய்ஸா மைகா என பலரும் டைனோசருக்கு டப்பிங் கொடுத்துள்ளனர். மேலும் அந்த வீடியோவின் இறுதியில் dontchooseextinction.com என்ற இணையதளத்திற்குச் செல்லுமாறு கூறப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தில் பருவ நிலை மாற்றத்தால் உண்டாகக்கூடிய அழிவிலிருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ளக்கூடிய வழிமுறைகள் பற்றி விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது .


ஐ.நா.வின் இந்த வித்தியாசமான விழிப்புணர்வு முயற்சிக்கு  பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுக்கள் குவிகிறது.அதுமட்டுமல்லாது இது மக்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது.


ALSO READ வலுக்கட்டாயமாக முத்தமிட்டார், தள்ளிவிட்டு ஓடி வந்தேன்: அரசியல்வாதி மீது பரபரப்பு குற்றச்சாட்டு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR