வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனின் உதவியாளராக இருந்த ஹூமா அபேதின் (Huma Abedin) ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றமான செனட் சபையின் ஒரு உறுப்பினர் தனது அனுமதி இல்லாமல் தனக்கு முத்தம் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
ஹூமா அபேதின் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். இதில் அவர் இந்த சம்பவத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். எனினும், அவர் யார் அந்த அமெரிக்க செனட் சபை எம்.பி. என்று குறிப்பிடவில்லை. ஆனால் இந்த சம்பவத்திற்குப் பின்னர் தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாக அவர் தெரிவித்யதுள்ளார்.
செனட் உறுப்பினர் நடந்துகொண்டது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது
'கார்டியன்' அறிக்கையின்படி, ஹூமா அபேதின், Both/And: A Life in Many Worlds என்ற ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். இதில் அவர் அமெரிக்க (America) செனட் உறுப்பினர் ஒருவரது செயலைப் பற்றி கூறியுள்ளார். அவரது செயலால் தான் மிகுழ்ந்த அதிர்ச்சி அடைந்ததாகவும், அவருடன் மிக இயல்பாக தான் பழகி வந்ததால், அவர் நடந்துகொண்ட விதம் தனக்கு ஆச்சரியத்தை அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் நடந்தவுடனேயே ஹூமா அமெரிக்க நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறினார். இந்த நிகழ்வு 2000 களில் நடந்தது. இருப்பினும், இன்று வரை அந்த செனட் உறுப்பினரின் பெயரை ஹூமா வெளிப்படுத்தவில்லை.
ALSO READ: இந்தியா -இத்தாலி பிரதமர்கள் அதிகாரபூர்வ சந்திப்பு
கிளின்டனுன் நெருக்கமானவர் ஹூமா
ஜனநாயகக் கட்சியின் சார்பில், ஒரு அதிபர் வேட்பாளராக இருந்த ஹிலாரி கிளின்டன் (Hillary Clinton), ஹூமா தனது இரண்டாவது மகள் போன்றவர் என்று கூறியுள்ளார். அந்த அளவிற்கு ஹூமா மீது ஹிலாரி கிளிண்டன் நம்பிக்கையும் பாசமும் கொண்டிருந்தார்.
45 வயதான ஹூமா ஒரு தொலைக்காட்சி நேர்காணலிலும் இந்த சம்பவம் பற்றி குறிப்பிட்டிருந்தார். அவர் "அதிர்ச்சியளிக்கும் வகையில் அந்த செனட் சபை உறுப்பினர் என்னை முத்தமிட்டார். அந்த சூழ்நிலையில் நான் மிகவும் சங்கடத்துக்கு ஆளானேன். அப்படிபட்ட ஒரு சூழலில் என்ன செய்வது என எனக்கு புரியவில்லை" என்று கூறினார்.
பின்னர் எல்லாம் சரியானது
ஹிலாரி கிளின்டனின் உதவியாளர் மேலும் கூறுகையில், "நான் சம்பவத்தை யாரிடமும் கூறாமல் மறைத்தேன். நான் பாலியல் தாக்குதலில் (Sexual Assault) பாதிக்கப்பட்டதாக அந்த நேரத்தில் நான் உணரவில்லை. இருப்பினும், அந்த சம்பவத்திற்குப் பிறகு, அந்த செனட் சபை எம்.பி. நீண்ட நாட்களுக்கு என்னிடம் மன்னிபுக் கேட்டார். நான் இயல்பாக, எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கிறேனா என்பதையும் கவனித்துக்கொண்டார். பின்னர் எங்களுக்கு இடையிலான உறவு மீண்டும் இயல்பாக முன் போல மாறியது." என்றார்.
Both/And: A Life in Many Worlds என்ற தனது புத்தகத்தில், ஹூமா, "இரவு உணவுக்குப் பிறகு, அந்த செனட் சபை உறுப்பினருடன் நான் வெளியே வந்தேன். ஒன்றாக நாங்கள் வந்துகொண்டிருந்த போது அவரது வீடு வந்தது. அப்போது அவர் வீட்டுக்கு வந்து காபி அருந்திச் செல்லுமாறு அழைத்தார். வீட்டினுள் சற்றும் எதிர்பாராத விதமாக அவர் எனக்கு முத்தம் கொடுத்தார். நான் அவரை தள்ளி விட்டு ஓடு வெளியே வந்தேன்." என்று எழுதியுள்ளார்.
ALSO READ: ‘நிறைய சாப்பிட்டா நாட்டுக்கு நல்லதல்ல’: அதிபர் கிம்மின் லேட்டஸ்ட் உத்தரவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR