உலகம் கொரோனாவை (Corona Virus) ஒழிக்க போராடிக் கொண்டிருக்கும் நிலையில், சீனா, அடுத்த வைரஸை உலகிற்கு அனுப்ப தயாராகி விட்டது.  சீனாவில் ‘குரங்கு பி’ (Monkey B Virus) வைரஸ் தாக்கி ஒருவர் பலியான செய்தி உலகில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. இந்த வைரஸ் நோயில் இறப்பு விகிதம் அதிகம் என்பது மேலும் கவலை அளிக்கும் விஷயம் ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த வாரம் சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மாநாட்டில், இந்த வைரஸ் பாதிப்பு முதன் முதலில்  மார்ச் மாதம் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டது. சீனாவில்  கால்நடை மருத்துவ நிபுணர்  இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டார்.  இவர்  இரண்டு குரங்குகளை உடற்கூறாய்வு செய்திருக்கிறார். அதன் பின் சில மாதங்களுக்கு பின் குமட்டல், வாந்தி, காய்ச்சல், நரம்பு பாதிப்பு போன்றவற்றால் அவதிப்பட்டுள்ளார். 


ALSO READ | Monkeypox: 18 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவை அச்சுறுத்தும் அரிய வகை நோய்


மனிதனின் நரம்பு மண்டத்தை தாக்கும் இந்த நோய் தொற்று ஏற்பட்ட நிலையில்,   பாதிக்கப்பட்ட மருத்துவரின் எச்சில், ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதை அடுத்து,  அந்த கால்நடை மருத்துவருக்கு ‘குரங்கு பி’ (Monkey B) வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தாக்கி ஒருவர் முதல் முறையாக பலியானது சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வகை வைரஸ் தொற்று, சிம்பேன்ஸி, மகாக்ஸ் வகை குரங்குகளில் 1932 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.


ALSO READ | Alcatraz Prison: உலகின் பயங்கரமான, மர்மமான சிறைச்சாலை


இதனை அடுத்து, குரங்கு உட்பட விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கு கால்நடை மருத்துவர்கள்,  கால்நடைகளுக்கான ஆய்வு மைய பணியாளர்கள் ஆகியோர் , கடுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சீனாவின் நோய் கட்டுப்பாடு மையம் அறிவுறுத்தியுள்ளது. 


ALSO READ | Germany: பேரழிவை ஏற்படுத்தி வரும் வெள்ளம், பதை பதைக்க வைக்கும் புகைப்படங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR