சீனா, பாகிஸ்தானை விட்டு விலகி செல்கிறதா; தாசு அணை திட்டம் நிறுத்தப்பட்டது ஏன்..!!

பாகிஸ்தானில் நடந்த பஸ் குண்டுவெடிப்பில் பல பொறியாளர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, பாகிஸ்தானில் தாசு அணை கட்டும் சீன நிறுவனமான CGGC, அணை கட்டுமான பணிகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 18, 2021, 02:01 PM IST
சீனா, பாகிஸ்தானை விட்டு விலகி செல்கிறதா; தாசு அணை திட்டம் நிறுத்தப்பட்டது ஏன்..!! title=

பாகிஸ்தானின் (Pakistan) வடக்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் தாசு அணை கட்டும் சீன நிறுவனமான CGGC, பேருந்து வெடிப்பில் பல சீன பொறியாளர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அணை கட்டுமான பணிகளை நிறுத்தி வைப்பதாக சனிக்கிழமை அறிவித்தது. சென்ற புதன்கிழமை, கைபர் பக்துன்க்வாவில் பயணிகள் பேருந்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் ஒன்பது சீன பொறியாளர்கள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர். 

CGGC நிறுவனம் தனது அறிக்கையில்,  “ஜூலை 14 ம் தேதி பஸ்ஸில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக, பலத்த உயிர் சேதங்கள் ஏற்பட்டன, CGGC Dasu HPP நிர்வாகம், தாசு நீர் மின் திட்டத்தின் கட்டுமானத்தை ஒத்திவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது. 60 பில்லியன் டாலர் சீனா-பாகிஸ்தான் பொருளாதார காரிடார் திட்டத்தின் ஒரு பகுதியாக தாசு அருகே சிந்து நதியில் ஒரு நீர்மின் நிலையத்தை நிர்மாணிக்க இந்த திட்டம் திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தானின் (Pakistan) கைபர் பக்துன்க்வா மாகாணத்தின், கோஹிஸ்தான் மாவட்டத்தின் தாசு பகுதியில் நடந்த பஸ் குண்டு வெடிப்பில், 9 சீனர்கள் உட்பட 13 பேர் இறந்தனர். சீன பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் உதவியுடன் அணை கட்டப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | Alcatraz Prison: உலகின் பயங்கரமான, மர்மமான சிறைச்சாலை

குண்டு வெடிப்பிற்கு பிறகு, சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முக்கியமான சந்திப்பை ரத்து செய்வது குறித்த தகவல்களை சீனா-பாகிஸ்தான் பொருளாதார கார்டார் திட்டத்தின் (CPEC)தலைவர் மேஜர் ஜெனரல் அசிம் பஜ்வா வழங்கினார். பஜ்வா ட்வீட் செய்து, ‘CPEC கூட்டம் இப்போது ஈகை திருநாளுக்கு பிறகு நடைபெறும். 2021 ஜூலை 16 அன்று நடைபெறவிருந்த CPEC  கூட்டம்,  ஈகை திருநாளுக்கு பிறகு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்’ என்றார்.

2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட, CPEC என்பது சீனாவின் பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சியின் (Belt and Road Initiative- BRI) ஒரு முக்கிய திட்டமாகும். இதனால்,  சீனா பாகிஸ்தானில் பெரிய அளவில் முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால், பாகிஸ்தான் மக்களுக்கு ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும். நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தபோது, ​​பல திட்டங்கள் நிறைவடையும் தருவாயில் இருந்தன. இருப்பினும், மோசமான பொருளாதார நிலைமை மற்றும் ஆட்சி மட்டத்தில் சரியான ஒத்துழைப்பு இல்லாததன் காரணமாக சிபிஇசி திட்டங்களை சீனா நிறுத்தி வைத்துள்ளது.

ALSO READ | பூமியில் வெற்றிக் கொடி நாட்டிய ஜெப் பெசோஸின்  விண்வெளிப் பயணம் விரைவில்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News