Sleepy Hollow Village: நடுரோட்டில் மாதக்கணக்கில் தூங்கும் மர்ம நோயால் வாடும் மக்கள்..!!
நல்ல ஆழ்ந்த தூக்கம் மக்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. நல்ல ஆரோக்கியத்திற்கு ஆழமான தூக்கம் மிகவும் முக்கியமானது, ஆனால் ஒரு நபர் நடுரோட்டில், சந்தையில் என எங்கு வேண்டுமானாலும் பல மாதங்கள் தூங்க முடியும் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா.
புதுடெல்லி: தூக்கம் என்பது பலரின் பலவீனம். தூக்கம் என்றூ வந்தால், ஒரு நபர் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு தூங்க போய்விடுவார்கள். மனைதர்கள் தூங்கும் நேரம், அவரின் தன்மையை பொறுத்து வித்தியாசப்படுகிறது. சிலர் இரண்டு முதல் நான்கு மணி நேரம் தூங்குகிறார்கள், சிலர் ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குவார்கள். ஆனால் சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது மக்கள் நடு ரோட்டிலிலேயே தூங்கும் நோயால் ஒரு கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
நல்ல ஆழ்ந்த தூக்கம் மக்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. நல்ல ஆரோக்கியத்திற்கு ஆழமான தூக்கம் மிகவும் முக்கியமானது, ஆனால் ஒரு நபர் நடுரோட்டில், சந்தையில் என எங்கு வேண்டுமானாலும் பல மாதங்கள் தூங்க முடியும் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா. இதுபோன்ற கிராமம் தான் கலாச்சி என்னும் தூங்கும் கிராமம் (Kalachi Sleeping Village). இங்கு பல மாதங்களுக்கு மக்கள் சாலையில் தூங்குகின்றனர்.
மர்மமான தூக்க நோய்
கஜகஸ்தானில் ஒரு கிராமம் உள்ளது, அங்கு மக்கள் நடந்து செல்லும் போது , திடீரென் நடுரோட்டிலேயே தூங்குகிறார்கள். அது மட்டுமல்ல, அவர்கள் மாதக் கணக்கில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த கிராமத்தின் பெயர் கலாச்சி. கலாச்சி கிராமத்தில், இந்த கிராம மக்கள் மர்மமான தூக்க நோயால் அவதிப்படுகிறார்கள். இந்த மக்கள் ஒரு முறை தூங்கினால், கும்பகர்ணன் போல், பல மாதங்கள் தூங்குகிறார்கள். 2010இல் தான் இந்த நோய் முதலில் கண்டறியப்பட்டது. சில குழந்தைகள் திடீரென பள்ளியில் விழுந்து அங்கேயே தூங்க ஆரம்பித்தார்கள். பின்னர், இந்த கிராமத்தில், இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது.
ALSO READ | ரஷ்ய அதிபர் மாளிகையை பாதுகாக்கும் ஆந்தைகளும் கழுகுகளும்..!!
இந்த கிராமத்தில் உள்ள மர்மமான தூக்க நோயை விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர், ஆனால் இதுவரை விஞ்ஞானிகளால் இந்த நோய் குறித்து எதுவும் கண்டறிய முடியவில்லை. பல மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இதில் ஈடுபட்டுள்ளனர். இங்குள்ளவர்கள் இவ்வளவு நாட்கள் எப்படி தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்த கிராமம் இப்போது 'ஸ்லீப்பி ஹாலோ வில்லேஜ்' (Sleepy Hollow Village) என்றும் அழைக்கப்படுகிறது
இந்த மர்ம நோயால் 14% க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுகின்றனர்
இந்த மர்மமான நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை சுமார் 600 பேர். தற்போது, கிராம மக்களில் 14 சதவீதத்துக்கும் அதிகமானோர் இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த நோய் உள்ளவர்களுக்கு அவர்கள் தூங்கிவிட்டார்கள் என்று கூட தெரியாது. இங்குள்ளவர்கள் சாலை, சந்தை, பள்ளி என எங்கும் தூங்குவதைக் காணலாம். அவர்கள் பல நாட்கள் தூங்குகிறார்கள்.
இந்த கிராமத்தில் ஒரு காலத்தில் யுரேனியம் அதிக அளவில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. விஷ கதிர்வீச்சு, உணவில் பொருளில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சுரங்கத்தின் காரணமாக, மக்கள் இப்போது இதுபோன்ற ஒரு வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, இப்பொழுது இந்த கிராமத்தில் குறிப்பிடத்தக்க அளவு கதிர்வீச்சு எதுவும் இல்லை. அதனால் இந்த நோய் குறித்த மர்மம் நீடிக்கிறது.
ALSO READ | சிறுமிகள் அனைவரும் சிறுவர்களாக மாறும் உலகின் மர்மமான கிராமம்..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR