ரஷ்ய அதிபர் மாளிகையை பாதுகாக்கும் ஆந்தைகளும் கழுகுகளும்..!!

கழுகுகள் மற்றும் ஆந்தைகள் ரஷ்யாவின் அதிபர் மாளிகையான கிரெம்லினை (Kremlin)  பாதுகாக்கின்றன. இதன் பின்னணியில் உள்ள காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

எந்தவொரு நாட்டிலும், அதிபர் அல்லது பிரதமர், அவர்களது மாளிகை  ஆகியவற்றின் பாதுகாப்பிற்கான பொறுப்பு கமாண்டோக்கள் அல்லது இராணுவத்திடம் இருப்பதை பொதுவாக நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஈ, காக்கை கூட அனுமதி இல்லாமல் நுழைய முடியாது என்ற அளவிற்கு, அங்கூ பாதுகாப்பு அவ்வளவு வலுவாக இருக்கும்.

1 /6

ரஷ்யாவின் அதிபர் மாளிகையான கிரெம்லின் என்ற மாளிகையையும், அதன் அருகிலுள்ள பெரிய அரசாங்க கட்டிடங்களை பாதுகாக்க பறவைகள் பணியில் உள்ளன என்பதை கேட்டால் ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா. ஆனால், அது தான் ஊண்மை. இந்த பறவைகளில் ஆந்தைகள் மற்றும் கழுகுகள் அடங்கும். கழுகுகள் மற்றும் ஆந்தைகள் கொண்ட ஒரு சிறப்பு குழு கிரெம்லினை பாதுகாக்கிறது

2 /6

நாட்டின் பாதுகாப்புத் துறை, ரஷ்ய அதிபர் மாளிகையில் கடுமையான பாதுகாப்பிற்காக ஒரு குழுவைத் தயாரித்துள்ளது. வேட்டைப் பறவைகள் அடங்கிய இந்த குழு 1984 முதல் அதிபர் மாளிகையின் பாதுகாப்ப்பு பணியில் உள்ளது. இந்த அணியில் தற்போது 10 க்கும் மேற்பட்ட பருந்துகள் மற்றும் ஆந்தைகள் உள்ளன என்று கூறப்படுகிறது. இந்த கழுகுகள் மற்றும் ஆந்தைகளுக்கு  சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன

3 /6

பறவைகளின் இந்த சிறப்புக் குழு 1984 இல் உருவாக்கப்பட்டது. இந்த குழு அமைப்பதற்கான காரணம் எந்தவொரு எதிரியின்சதி நடவடிக்கைகளை முறியடிப்பது அல்ல. அதன் முக்கிய பணி, அதிபர் மாளிகை மற்றும் அங்கு கட்டப்பட்ட அரசாங்க கட்டிடங்களை, காகங்கள் மற்றும் பிற பறவைகள் எச்சம் மற்றும் சிறுநீர்  கழிக்காமல், அங்கே அசுத்தப்பட்டுதாமல் தடுப்பதாகும். இந்த கழுகுகள் மற்றும் ஆந்தைகள், காகங்கள் அல்லது பிற பறவைளைப் பார்த்ததும், உடனே  தாக்கி விரட்டுகின்றன. 

4 /6

கிரெம்லின் மற்றும் சுற்றியுள்ள கட்டிடங்களை, பறவைகள் அசுத்தப்படுத்தாமல் பாதுகாக்கும் வேட்டைப் பறவைகள் குழுவில் 'ஆல்பா' என்ற 20 வயது பெண் பருந்து மற்றும் அதன் தோழர் 'ஃபிலேயா' ஆந்தை ஆகியவை அடங்கும். காகம் அல்லது வேறு ஏதேனும் பறவை கண்ணில் பட்டால், அல்லது அதன் குரலை கேட்டாலே, இவை பறந்து சென்று  விரட்டுகின்றன அல்லது தாக்கி கொலை செய்கின்றன. இந்த வேட்டைப் பறவைகளை நிர்வகிக்கும் குழுவில் அங்கம் வகிக்கும் 28 வயதான அலெக்ஸ் வலசோவ் கூறுகையில், இந்த பறவைகள் காகங்கள் மற்ற்ம் பிற பறவைகளை விரட்ட மட்டுமல்ல, பறவைகள் இங்கு கூடு கட்டாதபடி பார்த்துக் கொள்கின்றன என்றார்.

5 /6

ஆரம்பகால சோவியத் யூனியனில், இந்த கட்டிடங்களை பாதுகாக்க காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர் என கிரெம்ளின் மற்றும் அதைச் சுற்றியுள்ள அரசு கட்டிடங்களை மேற்பார்வையிடும் பாவெல் மல்கோவ் கூறுகிறார். சில நேரத்தில், வேட்டையாடுபவர்களின் பதிவு செய்யப்பட்ட குரல்களும் பறவைகளை அச்சுறுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டன, ஆனால் இந்த முறைகள் அனைத்தும் தோல்வியுற்றன  

6 /6

ஆந்தை 'ஃபிலேயா'வுக்கு பயிற்சி அளிக்கும் டெனிஸ் சிடோகின், இரவு நேரங்களில் வேட்டையாடுவதில், மிகவும் திறன் வாய்ந்தது என கூறுகிறார். அவர் தனது பெரிய கண்களால், 180 டிகிரி கழுத்தை சுழற்றி, சுற்றியுள்ள இடத்தை திறமையாக கண்காணிக்க முடியும் என்றார். இது மட்டுமல்லாமல், இந்த வேட்டை பறவைகளுக்கு இப்போது வேறு ஒரு சிறப்பு வகை பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதனால், அதிபர் மாளிகையை சுற்றி ஒரு சிறிய ட்ரோன் தென்பட்டாலும், அவற்றையும் வீழ்த்திவிடும் திறன் கொண்டது.