இங்கிலாந்து அரச குடும்பத்தில், 7 தலைமுறைகளாக, முக்கிய நபராக கருதபட்டவரும், இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் இன்று காலமானார். அவருக்கு வயது 99.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

The Duke of Edinburgh என அதிகாரபூர்வமாக அழைக்கப்பட்ட அவர், தனது மனைவியான இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் 69 ஆண்டுகால ஆட்சி காலத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தார். பிரிட்டிஷ் வரலாற்றில் மிக நீண்ட கால ஆட்சி என அறியப்படும் இந்த கால கட்டத்தில், உறுதியான நடவடிக்கைகள் எடுக்கும் சிறந்த நிர்வாக திறன் கொண்டவர் என்ற புகழை பெற்றார். 



கிரேக்க இளவரசரான பிலிப், 1947 இல் எலிசபெத்தை மணந்தார், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் அரசாட்சியை நவீனமயமாக்குவதில் முக்கிய பங்கு வகித்தோடு மட்டுமல்லாமல், பக்கிங்ஹாம் அரண்மனையில், ராணியின் நம்பிக்கைக்கு பாத்திரமான முக்கிய நபராக இருந்தார்.


கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த இளவரசர் பிலிப், அண்மையில் இருதய பிரச்சினைகளுக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்றிருந்தார். 


இந்த நிலையில், அரச மாளிகையில் இளவரசர் பிலிப் உயிர் பிரிந்ததாக  அரச குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்த பெருமைக்குரியவர் பிலிப்  என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | மியான்மாரில் ராணுவத்தின் வெறியாட்டம்; தூதுவரையும் விட்டு வைக்காத ராணுவம்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR