பிரபல முஸ்லீம் கல்வியாளர் தாரிக் ரமாதான், பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் பிரெஞ்சு காவல்துறையின் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாரிஸ் நகரில் கடந்த ஆண்டு இரண்டு பெண்களை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக இவர் மீது அப்பெண்கள் தொடுத்த புகாரின் போரில் இவர் கைது செய்யப்பட்டார்.


55 வயது ரமதான், சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர், ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் இஸ்லாமியம் போதிக்கும் பேராசிரியர் ஆவார். ஆனால் இந்த வழக்கிற்கு பிறகு கடந்த நவம்பவர் மாதம் முதல் இவர் விடுப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


இவர் எப்படி குற்றவாலியானார்?


கடந்த 2016 ஆண்டு அயரி என்பவர் வெளியிட்ட புத்தகத்தில் "நான்கு ஆண்டுகளுக்கும் முன்னர் பாரிஸ் விடுதி ஒன்றில் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்". ஆனால் அந்த புத்தகத்தில் அந்த குற்றவாலியை குறித்து ஏதும் கூறப்படவில்லை.


பின்னர் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அப்பெண்மனி, அந்த குற்றத்தை செய்தவர் தாரிக் ரமாதான் என மறைமுகமாக குறிப்பிட்டர்.


இதனையடுத்து, இஸ்லாமியத்திற் மதம் மாறிய பெண் ஒருவரும் இவரின் மீது இதேப்போன்று பாலியல் வழக்கில் குற்றம் சாட்டினார்.


இவரைத் தொடர்ந்து இதர 4 பெண்களும் இவரின் மீது புகார் அளிக்க பின்னர் இவரின் மீது கடந்த ஆண்டு பாலியல் குற்ற வழக்கு பதியப்பட்டது!


முஸ்லீம் அறிஞர்கள் மத்தியில் ஒரு சர்ச்சைக்குரிய மற்றும் செல்வாக்குமிக்க இவர், 1920 ஆம் ஆண்டு முஸ்லீம் சகோதரத்துவ நிறுவிய இமாம் ஹாசன் அல் பன்னா அவரின் பேரன் ஆவார்.


மத சுதந்திரம் குறித்த பிரிட்டனின் வெளியுறவு அலுவலக ஆலோசனை குழுவிலும் பங்கேற்றவர் ஆவார்.