காபூல்: ஆப்கானிஸ்தானுக்கு (Afghanistan) எதிராக அமெரிக்கா (America) 2001 ஆம் ஆண்டு முதல் தொடுத்த போரில் சுமார் 2 லட்சத்து 41ஆயிரம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்று அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகம் வெளியிட்ட "போர் திட்டத்தின் செலவு பற்றிய புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தப் போரினால் இதுவரை 71 ஆயிரத்துக்கும் மேலான அப்பாவி மக்களும் பலியாகி உள்ளனர். கடந்த ஜுலை மாதம் "ஐ.நாவின் அகதிகள் அமைப்பு நடத்திய செய்தியாளர் கூட்டம் ஒன்றில் ஆப்கானிஸ்தானில் மனிதர்களின் மீதான நேசிப்பு என்பது மிகவும் மோசமாக உள்ளது. இதன் காரணமாக அங்கு வசிக்கின்ற அப்பாவி மக்கள் வீடு, வாசல்களை இழந்து அகதிகளாக அல்லல்பட்டு வருகின்றனர் என்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளது.


ஐ.நா வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி அங்கு காணப்பட்டுள்ளது என்ற போதிலும் சில முக்கிய குறியீடுகள் அங்கு மோசமான நிலையில் உள்ளது.


ஆப்கானிஸ்தானில் (Afghanistan) மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு உலகளவில் 213 ஆவது இடத்தில் உள்ளது. வேலைவாய்ப்பில்லா விகிதமும் 50 விழுக்காடும், வறுமை விகிதம் 70 விழுக்காட்டினையும் ஆப்கானிஸ்தானில் தாண்டியுள்ளது.


ALSO READ | அதிர்ச்சித் தகவல்! பெண்ணின் சடலங்களுடனும் உடல் உறவு கொள்ளும் தாலிபான்கள்..!!


அங்கு மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் வெறும் 53.25 வயது வரை மட்டுமே உள்ளது. 2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் (Afghanistan) மீது அமெரிக்கா (America) போர் ஒன்றினை தொடுத்தது. ஆனால் இப்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பான சூழ்நிலை நிலவுவதில்லை. அதேநேரத்தில் வளர்ச்சியும் மிக மோசமாக இருந்து வருகிறது என ஐ.நா வின் புள்ளி விவரங்கள் வெளியிட்டுள்ளது.


ஆகஸ்ட் 15 அன்று, தலைநகர் காபூல் உட்பட ஆப்கானிஸ்தானின் (Afghanistan) பெரும்பகுதியை தலிபான்கள் கைப்பற்றினார்கள். தலிபான்கள் கைப்பற்றியவுடன், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு தப்பிச்சென்றார். ஆப்கானை கைப்பற்றியதிலிருந்து, தலைநகர் காபூல் உட்பட ஆப்கானிஸ்தானின் அனைத்து பகுதிகளிலும் தலிபான் (Taliban) பயங்கரவாதிகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 


ALSO READ | ஆப்கானில் ஆட்சி அமைக்கும் வேலையை தொடங்கிய தலிபான்; தப்பியோடும் மக்கள்


தாலிபான் ஆட்சிக்கு அஞ்சிய நிலையில், எப்படியாவது அவர்களின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து  தப்பித்து விட வேண்டும் என விமான நிலையத்தை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR