Pakistan: வரலாறு காணாத கடும் வறட்சியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்
பாகிஸ்தானில் மழைப்பொழிவு மிகவும் குறைவாக இருப்பதோடு, தண்ணீரை விநியோகத்தின் நிர்வாகம் தொடர்பாக பஞ்சாப் மற்றும் சிந்து மாகாண அரசுகளுக்கிடையில் கடுமையான மோதல் நிலவுவதும் காரணமாகும்.
பாகிஸ்தானில் (Pakistan) வரலாறு காணாத வறட்சி நிலவுக்கிறது. இந்த நிலை நீடித்தால், பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீர் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்கா விட்டால், நிலைமை சிக்கலாகி, விவசாயம் அழிந்து விடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பாகிஸ்தானில் மழைப்பொழிவு மிகவும் குறைவாக இருப்பதோடு, தண்ணீரை விநியோகத்தின் நிர்வாகம் தொடர்பாக பஞ்சாப் மற்றும் சிந்து மாகாண அரசுகளுக்கிடையில் கடுமையான மோதல் நிலவுவதும் காரணமாகும்.
பாகிஸ்தான் (Pakistan) நாட்டில் தனிநபர் நீர் தேவை ஆண்டுக்கு 110 கோடி கன மீட்டர். லாகூர் உட்பட பஞ்சாப் முழுவதும் சிறிய மற்றும் பெரிய நகரங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறையத் தொடங்கியுள்ளது. பஞ்சாபின் நிலத்தடி நீர் மட்டம் 600 அடியில் இருந்து 50 அடியாக குறைந்துள்ளது.
ALSO READ | Pakistan: ஜகோபாபாத்தில் உலகில் எங்கும் பதிவிடப்படாத அளவு ரெகார்ட் வெப்பநிலை பதிவு
மறுபுறம், சிந்து மாகாணத்தின் நிலைமையும் மோசமாக உள்ளது. பாகிஸ்தான் பொறியியல் அமைப்பின் தலைவர் அம்ஜத் சயீத், வரும் நாட்களில் தண்ணீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என்கிறார். எதிர்காலத்தில் இதனால் பாகிஸ்தாணில் நிலை படு மோசமாகக் கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
புதிய நீர்த்தேக்கங்கள் அமைக்கப்படாவிட்டால், தண்ணீர் வீணடிக்கப்படுவது நிறுத்தப்படாவிட்டால், பாகிஸ்தானின் பல பகுதிகளில் மனிதர்கள் மற்றூம் உயிரினங்கள் பெருமளவில் மடியக் கூடும் என நீர் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதிகரித்து வரும் மக்கள் தொகை, தண்ணீரை வீணாக்குதல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை காரணமாக, அதிகாரிகள் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையெனில் கடும் பஞ்சம் ஏற்படும் என நீர் வல்லுநர்களின் கருதுகின்றனர்.
ALSO READ | வரலாற்றில் ஜூலை 6: ரேபீஸ் தடுப்பூசி முதல், சுவாரஸ்யமான பல முக்கிய நிகழ்வுகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR