மூழ்கும் நகரங்கள்.. டைம் ட்ராவலர் கொடுத்துள்ள அதிர்ச்சி தகவல்...!
புவி வெப்பமயமாதலின் விளைவுகள் இப்போது மெல்ல மெல்லத் தெரிகின்றன. வானிலை மாற்றம், கடுமையான வெப்பம் ஆகியவை நமக்கு இதனை உணர்த்துகின்றன.
புவி வெப்பமடைதல் மற்றும் பிற காரணங்களால் காலநிலை வேகமாக மாறுகிறது. வரும் காலங்களில் பூமி அல்லது இந்த பிரபஞ்சத்தின் திசை மற்றும் நிலை என்னவாக இருக்கும் என்று அனைத்து விஞ்ஞானிகளும் பல வித ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பல பீதியூட்டும் பயங்கரமான கூற்றுகளும் முன் வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், காலப் பயணி (Time Traveller) என்று கூறிக்கொள்ளும் நபர், 5000 ஆண்டுகளில் எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதைக் கண்டுபிடித்துவிட்டதாகவும், என்ன நடக்கும் என்பது தனக்குத் தெரியும் என்றும் கூறியுள்ளார். இது மட்டுமின்றி, தனது கூற்றை நிரூபிக்கும் வகையில், அவர் அதற்கான ஒரு ஆதாரத்தை முன்வைத்துள்ளார், இதை கண்டு வல்லுனர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உண்மையில், வரும் காலங்களில் உலகின் சில அழகான நகரங்கள் மூழ்கும் என்று இந்த நபர் கூறுகிறார். அதுமட்டுமின்றி நீரில் மூழ்கி கிடக்கும் நகரத்தின் படத்தையும் வழங்கியுள்ளார். Mirror.UK என்ற செய்தி நிறுவனம் வழங்கியுள்ள ஒரு செய்தியில், இந்த நபரின் பெயர் எட்வர்ட் என்றும் அவர் 5000 ஆம் ஆண்டை எட்டியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு ரகசிய டைம் டிராவலிங் பரிசோதனையின் உதவியுடன் அவர் எதிர்காலத்தை அடைந்துள்ளார் என்று கூறப்பட்டது. அவர் தனது கருத்துக்கு ஆதாரத்தை முன்வைத்து, அமெரிக்க நகரமான லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து ஒரு படத்தைக் காட்டினார்.
நகரம் முழுவதுமாக நீரில் மூழ்கியிருப்பது இந்தப் படத்தில் தெரிகிறது. புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக இது நடக்கும் என்று அந்த நபர் கூறுகிறார். எட்வர்ட் 5000 ஆம் ஆண்டில் வந்த போது இந்த நகரம் மூழ்கியதாகக் கூறுகிறார். இங்குள்ள ஒரு ஆய்வகத்தில் பணிபுரிந்து வந்த அவர், இந்தப் படத்தை எடுத்துள்ளார். அந்த நபர் 3000 ஆம் ஆண்டில் வந்த போது தான் நகரம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியதாக மக்கள் சொன்னார்கள். பூமியில் புவி வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்தால், பல நகரங்கள் மூழ்கிவிடும் என ஷாக் கொடுக்கிறார் அந்த டைம் ட்ராவெலர்.
எவ்வாறாயினும், மற்றொரு ஊடக அறிக்கை இது குறித்து கூறுகையில், அந்த நபர் இதற்கு முன்பும் இது போன்ற கூற்றுக்களை முன்வைத்துள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் தொடர்பான கருத்து கடுமையாக வைரலாகி வருகிறது, இதுமட்டுமின்றி, அதில் பகிரப்பட்ட படமும் மிகவும் வைரலாகி வருகிறது. தற்போது இது குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டு. இதுவரை செயற்கை நுண்ணறிவு மூலம் மட்டுமே எதிர்காலத்தை கற்பனை செய்து வந்தவர்கள், தற்போது காலப் பயணிகளாக மாறியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
இந்த நபரின் கூற்றுகளில் உண்மை உறுதிப்படுத்தப்படுத்த போதுமான தகவல்கள் இல்லை. ஆனால் அந்த நபர் கூறிய விஷயங்கள் பற்றிய விவாதம் விஞ்ஞானிகளிடையே எட்டியுள்ளது. பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருகின்றன என்பதும் உண்மை. புவி வெப்பமயமாதலின் விளைவுகள் இப்போது மெல்ல மெல்லத் தெரிகின்றன. வானிலை மாற்றம், கடுமையான வெப்பம் ஆகியவை நமக்கு இதனை உணர்த்துகின்றன.
மேலும் படிக்க | 2023ம் ஆண்டின் ‘அந்த’ 6 நாட்கள்... ஆச்சர்யத்திலும் நடுக்கத்திலும் உலகம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ