டைட்டானிக் கப்பலைப் போலவே விபத்துக்குள்ளான நவீன நீர்மூழ்கிக் கப்பல்! 5 பேர் பலி
டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளைப் பார்க்கச் சென்ற நீர்மூழ்கிக் கப்பலில் அனைவரும் இறந்தனர், எப்படி இறந்தார்கள் தெரியுமா?
டைட்டானிக் கப்பலை பார்க்க ஐந்து பேருடன் சென்ற சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் ஜூன் 18 அன்று காணாமல் போனது. அதில் பயணித்த 5 பேரும் உயிரிழந்தனர். டைட்டானிக் கப்பலின் சிதிலமடைந்த பகுதிகளைக் காணச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்தவர்களை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவந்தது.
இறந்தவர்கள் யார்?
டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளைப் பார்க்கச் சென்ற நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த ஐந்து பேரும் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களில் பில்லியனர் எக்ஸ்ப்ளோரர் ஹமிஷ் ஹார்டிங், பிரெஞ்சு ஆய்வாளர் பால்-ஹென்றி நர்கியோலெட், பாகிஸ்தானிய குடும்பத்தைச் சேர்ந்த, இளவரசர் தாவூத் மற்றும் அவரது மகன் சுலைமான் தாவூத் மற்றும் Oceangate Expeditions CEO மற்றும் Titan பைலட் ஸ்டாக்டன் ரஷ் ஆகியோர் அடங்குவர்.
சிதைபாடுகள் கண்டெடுப்பு
டைட்டானிக் அருகே தேடுதல் வேட்டையாடியவர்கள் காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவைக் கண்டுபிடித்ததாக அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது. ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனம் (ROV) டைட்டானிக்கிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் கடல் தளத்தில் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் ஒரு பகுதியைக் கண்டுபிடித்தது.
அதையடுத்து மேற்கொண்ட தீவிர தேடுதலில், வேறு பல சிதைபாடுகளும் கண்டறியப்பட்டது என அமெரிக்க கடலோர காவல்படை ரியர் அட்மிரல் ஜான் மௌகர் தெரிவித்தார்.
காணாமல் போன டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த ஐந்து பேரும் டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளுக்கு அருகில் ஏற்பட்ட வெடிவிபத்தில் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | அட்லாண்டிக் கடலில் காணாமல் போன Titanic நீர்மூழ்கி கப்பல்... இன்னும் சில மணி நேரங்கள் தான்
நீர்மூழ்கிக் கப்பலின் உரிமையாளர்
காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பல் OceanGate Expeditions நிறுவனத்திற்குச் சொந்தமானது, ஆழ்கடல் ஆய்வுக்காக மனிதர்களைக் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்புகிறது.
டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளைப் பார்க்க செல்லும் சுற்றுலாப் பயணிகளை சுற்றுலா அழைத்துச் செல்லும் இந்த நிறுவனம், இதற்காக $250,000 கட்டணம் வசூலிக்கிறது.
டிரக் அளவிலான இந்த நீர்மூழ்கிக் கப்பலில் 5 பேர் பயணிக்கலாம். பொதுவாக நான்கு நாட்களுக்கு தேவையான அவசரகால ஆக்சிஜனுடன் டைவ் செய்கிறது. 3,800 மீ ஆழத்தில் உள்ள சிதைவுக்குள் சென்று பார்ப்பது என மொத்தம் எட்டு நாட்களுக்கான சுற்றுலா பயணத்திட்டத்தின் முதல் நாளிலேயே விபத்து நேரிட்டது.
அமெரிக்க கடலோர காவல்படையின் கூற்றுப்படி, ஜூன் 18 அன்று நீர்மூழ்கிக் கப்பலுடனான தொடர்பு, பயணம் தொடங்கிய ஒரு மணி நேரம் 45 நிமிடங்களுக்குள் துண்டிக்கப்பட்டது. இது தொடர்பாக நேற்று (2023, ஜூன் 19, திங்கட்கிழமை) செய்திகள் வெளிவந்தன.
ஜூன் 18 ஞாயிற்றுக்கிழமை காலை வடக்கு அட்லாண்டிக்கில் டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளை நோக்கி சென்றுக் கொண்டிருந்தபோது, கிழக்கு கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் கடற்கரையிலிருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போனது.
காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடிக்க அமெரிக்க கடலோர காவல்படை தலைமையிலான சர்வதேச தேடுதல் குழு தீவிர முயற்சியில் ஈடுபட்டது. நீர்மூழ்கிக் கப்பலில் 96 மணிநேர ஆக்ஸிஜன் இருப்பதாக மதிப்பிடப்பட்டது, இது வியாழக்கிழமை காலைக்குள் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போன பகுதியில், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில், நீருக்கடியில் சோனார் கருவிகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாக கூறப்பட்டது. சத்தத்திற்கும் கடலின் அடிவாரத்தில் நீர்மூழ்கிக் கப்பல் இருக்கும் இடத்திற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என்று மௌகர் கூறினார்.
மேலும் படிக்க | டைட்டானிக் கப்பலுக்கு சுற்றுலா சென்ற பயணிகளை 2 நாட்களாக காணவில்லை! ஆட்லண்டிக் கடலின் மர்மம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ