அமெரிக்காவில் கல்வி கடன் பெற்றிருக்கும் 1,50,000 மாணவர்களிள் கல்விக்கடன்களை அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு தள்ளுபடி செய்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. 430 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மாணவர்கள் கடனை ரத்து செய்வதற்கான திட்டத்தை முன்னெடுத்தார். அதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த நிலையில், கடன் தள்ளுபடியை சமாளிப்பதற்கான பிற வழிகளைக் கண்டுபிடிப்பதாக உறுதியளித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சில காலங்களுக்கு முன்பு சொன்ன உறுதிமொழியின்படி, தற்போது அமெரிக்க அதிபர் மாணவர்களின் கல்விக் கடன்களை் ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்காவில் இளங்கலை பட்டப்படிப்புக்கு கல்விக்கட்டணம் மிக அதிகம். எனவே கல்விக்கட்டணத்தை செலுத்த முடியாத மாணவர்கள் கடன் வாங்கி படிப்பதும் குறிப்பிடத்தக்கது.



பெரும்பாலான பெற்றோர்களால் கல்விக்கட்டணம் கட்ட முடியாததால், பெரும்பாலான மாணவர்கள் பள்ளிப் படிப்புடன், கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றனர். இதனால், மேற்படிப்பைத் தொடராமல் வேலைக்கு செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகமாக இருக்கிறது.


கல்வியில் ஆர்வமுள்ளவர்கள் கடன் பெற்று கல்லூரிப் படிப்பைத் தொடர்கிறார்கள். ஆனாலும், தங்களது இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்து விட்டு, வேலைக்கு செல்லும் போது அவர்கள் செலுத்த வேண்டிய கல்விக்கடன் பெரும் சுமையாக நிற்கிறது. 


மேலும் படிக்க | PM விஸ்வகர்மா திட்டம்... 5% வட்டியில் ₹3 லட்சம் கடன்... ₹500 உதவித்தொகை.. பலன் பெறுவது எப்படி!


இளைஞர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கைகள் இருந்த நிலையில், கடந்த தேர்தலில் போட்டியிட்டபோது, மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்வதாக ஜோ பைடன் தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார்.


இப்போது அடுத்த தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்துவரும் நிலையில், ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முயற்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஈடுபட்டுள்ளார். பிடன் நிர்வாகம் ஒரு தசாப்தத்தில் ஃபெடரல் பெல் மானியங்களுக்கான மிகப்பெரிய அதிகரிப்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களைப் பாதுகாக்க இந்த புதிய விதிகள் உதவும்.


கல்விக்கடன் திட்டத்தின் கீழ் தகுதியுடைய கிட்டத்தட்ட 1.53 லட்சம் பேருக்கு 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான மாணவர் கடன்களை தனது நிர்வாகம் ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்தார்.


நிர்வாக நடவடிக்கைகள் மூலம் கிட்டத்தட்ட 3.9 மில்லியன் மாணவர்களுக்கு சுமார் 138 பில்லியன் டாலர் கடனை பைடன் நிர்வாகம் ரத்து செய்துள்ளது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. aving on a Valuable Education (SAVE) எனப்படும் திருப்பிச் செலுத்தும் கடன் திட்டத்தில் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு சமீபத்திய அறிவிப்பு பொருந்தும் என்றும் அறிவிப்பு கூறுகிறது.


மேலும் படிக்க | உடனடி கடன் கொடுக்கும் மோசடி கடன் செயலிகளுக்கு ஆப்பு வைத்த RBI: லிஸ்ட் ரெடி, நடவடிக்கை விரைவில்


இவர்களைத் தவிர, குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக பணத்தை திருப்பிச் செலுத்தி வரும் 12 ஆயிரம் டாலர் அல்லது அதற்கும் குறைவாக கடன் வாங்கியவர்களுக்கும் இந்த கடன் தள்ளுபடி பொருந்தும். பிப்ரவரி 2024 முதல், SAVE திட்டம் அமலுக்கு வருகிறது.


SAVE இன் கூடுதல் கூறுகள் 2024 கோடையில் நடைமுறைக்கு வரும், மேலும் இளங்கலைக் கடன்களுடன் கடன் வாங்குபவர்களுக்கு இன்னும் பணம் செலுத்துவதைக் குறைக்கும்.


இந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜோ பைடன் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


மேலும் படிக்க | அப்பாவிகளை ஏமாற்றும் ஆன்லைன் கடன் செயலிகள்... கடும் நடவடிக்கை எடுக்க நிதி அமைச்சகம் உத்தரவு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ