Instant Loan Apps: இன்றைய காலகட்டத்தில், விலைவாசியும் தேவைகளும் அதிகரித்து உள்ள நிலையில், கடன் தேவை என்பது எல்லோருக்கும் தான் இருக்கிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு, போலி நிறுவனங்கள் சில, செயலிகளை உருவாக்கி, உடனடி கடன் கொடுக்கிறேன் எனக்கூறி, அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கின்றனர். இதனால் பலர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் இதுபோன்று, மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
நிதி ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் கூட்டம்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், போலி நிறுவனங்கள் மீது எடுக்கும்படி, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பிற நிதி கண்காணிப்பு அமைப்புகளை அறிவுறுத்தி உள்ளார். புதன்கிழமை அன்று நடைபெற்ற நிதி ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் (Financial Stability and Development Council - FSDC), போலி நிறுவனங்கள், ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் அங்கீகரிக்கப்படாத கடன்களை (Loan) வழங்குவதை கட்டுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கிய உத்தரவு
FSDC கூட்டத்தில் கலந்து கொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆன்லைன் செயலிகள் மூலம், உடனடி கடன் வழங்கும் போலி நிறுவனங்களை கண்டறிய, மிகவும் விழிப்புடன் செயல்படுமாறும், இதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, முழுமூச்சுடன் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில் தயக்கமே காட்டக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
ஆன்லைன் செயலி மூலம் கிடைக்கும் உடனடி கடன்
செயலி மூலம் கடன் கொடுக்கும் பல நிறுவனங்கள், மோசடி மூலம் அப்பாவி மக்களை ஏமாற்றும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எளிய தவணை முறையில் நிறைய கடன் தருவதாக கூறி, அப்பாவி மக்களை சிக்க வைக்கும் நிறுவனங்கள், கடனுக்கான செயலாக்க கட்டணம் போன்றவற்றை வசூலித்துக் கொண்டு, கடன் தொகையை கொடுக்காமல் கம்பி நீட்டும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் கோபாலில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் பேசு பொருளாகியது. கடன் செயலி மூலம், சுமார் 2 லட்சத்தை இழந்த அந்த அப்பாவி இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். இது போன்று ஒன்றல்ல, இரண்டல்ல... எண்ணற்ற சம்பவங்கள் நாடு முழுவதும், நடந்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் பெருமன்ளவு சீனாவை சேர்ந்தது என்பதும் கண்டறியப்பட்டது.
மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.. 5 லட்சம் இலவசம், முதல்வர் அறிவிப்பு
நிதி ஸ்திரத்தன்மை கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் விபரம்
நிதி ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சிலின் 28வது கூட்டத்தில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ், SEBI, IRDA, ஓய்வூதிய நிதி கட்டுப்பாட்டு அமைப்பு, பொருளாதார விவகாரத்துறை ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
FSDC கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட பிற விஷயங்கள்
கடன் செயலிகள் மீதான கட்டுப்பாடுகள் தவிர, நிதி செயல்பாடுகள் குறித்த ஆலோசனை, விதி சார்ந்த நடவடிக்கைகளில் சந்திக்கும் நடைமுறை சிக்கல்களை தீர்ப்பது, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில் முக்கியமாக KYC நடைமுறையில், அனைத்து வங்கிகள் மற்றும் காப்பீடு அமைப்புகள், நிதி நிறுவனங்கள் ஒரே மாதிரியான வாடிக்கையாளர் விவர படிவம் என்னும் KYC படிவத்தை தயாரிப்பது, நடைமுறைகளை எளிதாக்கும் என்ற யோசனை முன் வைக்கப்பட்டது. நாட்டில் உள்ள நிதி சார்ந்த அமைப்புகள் அனைத்தும், ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம், பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு மேம்படுத்துவது முடியும் என்பது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ள புதிய வழிகாட்டுதல்கள்
முன்னதாக, கடன் செயலிகள் மூலம் நடக்கும் மோசடிகளை கணக்கில் கொண்டு, ரிசர்வ் வங்கி கடனை திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், விதிக்கப்படும் அபராத கட்டணம் குறித்த புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. புதிய வழிகாட்டுதலின் கீழ், கடனை திரும்பச் செலுத்த தவறியதற்காக அபராதம் செலுத்த வேண்டியதில்லை. ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும் அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு, இந்த வழிகாட்டுதல்கள் பொருந்தும். இந்த வழிகாட்டுதல், 2024 ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ